சினிமா செய்திகள்

கார்த்திக்கு முன்னுரிமை.. அதர்வாவை தவிர்க்கும் ராஜ்கிரண் ?

ளவாணி , வாகை சூடவா, நய்யாண்டி படங்களை இயக்கியவர் சற்குணம். இவரின் இயக்கத்தில் இறுதியாக ‘களவாணி 2’ படம் வெளியானது. தற்பொழுது, அதர்வா நடிக்க படமொன்றை இயக்கிவருகிறார் சற்குணம்.

‘சண்டிவீரன்’ படத்தைத் தொடர்ந்து அதர்வா – சற்குணம் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படமிது.

லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துவருகிறது. இது, லைகாவின் 22வது தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் அதர்வாவுடன் ராஜ்கிரண், ராதிகா சரத்குமார், ஆர்.கே.சுரேஷ், ஜெயபிரகாஷ், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள்.

இந்தப் படத்துக்கு இசை ஜிப்ரான். திருவையாறு பகுதிகளில் முதல்கட்டப் படப்பிடிப்பு துவங்கியது. தற்பொழுது, இந்தப் படம் குறித்த இரண்டு தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, முதல் தகவலாக படத்துக்கு ‘பட்டத்து இளவரசன்’ என்று பெயர் வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இரண்டாவது, இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொஞ்சம் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் ராஜ்கிரண் என்று சொல்கிறார்கள்.

கார்த்தி நடிக்க முத்தையா இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘விருமன்’. இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகும் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் ராஜ்கிரண் நடித்துவருகிறார். இந்தப் படத்துக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறாராம் ராஜ்கிரண். அதனால், அதர்வா படத்தின் பக்கம் வரவில்லையாம். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால், அதர்வா படத்தைத் தவிர்ப்பதாகவே கூறிகிறார்கள்.

இதனால், சற்குணம் கொஞ்சம் அப்செட்டாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Posts