சினிமா செய்திகள்

அண்ணாத்தவுக்கு அனுமதி மாநாடு படத்துக்கு தடையா? – வெடிக்கும் சர்ச்சை

தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நவம்பர் 18ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்தச் சுற்றறிக்கையில் பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதைக் கட்டாயமாக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.

1. தெரு அல்லது பொது இடம்.

2. மார்க்கெட், தியேட்டர் அல்லது வேறு பொழுதுபோக்கும் இடம்.

3. பள்ளி, கல்லூரி, விளையாட்டு மைதானம் போன்ற இடங்கள்.

4. ஹோட்டல், ஹாஸ்டல், தங்கும் விடுதிகள், சத்திரங்கள், கிளப்கள்.

5. தொழிற்சாலைகள், கடைகள்

ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

இதற்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் வந்திருக்கிறது.

இந்த அறிவிப்பு திரைத்துறைக்கு அதிர்ச்சியூட்டுவதாக அமைந்திருக்கிறது.

நவம்பர் 25 ஆம் தேதி சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பு அப்படத்துக்கு எதிராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்!

என்று சொல்லியிருக்கிறார்.

அப்பதிவில் கருத்துத் தெரிவிக்கும் பலரும் அண்ணாத்த படம் வெளியாகும் நேரத்தில் இப்படி ஒரு உத்தரவு போடாமல் மாநாடு படம் வெளியாகும் நேரத்தில் இப்படி ஒரு உத்தரவு போட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது என்று சொல்லிவருகிறார்கள்.

Related Posts