சினிமா செய்திகள்

அண்ணாத்த பெரிய வசூல் ஆனாலும் ரஜினிக்குச் சிக்கல் – விவரம்

ரஜினியின் 168 ஆவது படமான அண்ணாத்த வெளியாகிவிட்டது. அதனால் அவருடைய அடுத்த படம் பற்றிய செய்திகளும் வெவ்வேறு விதமாக வரத் தொடங்கிவிட்டன.

ரஜினியின் 169 ஆவது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்றும் முதலில் சொல்லப்பட்டது.

ரஜினியின் சம்பளம் மற்றும் படத்தின் மொத்தச்செலவு ஆகியனவற்றின் காரணமாக அப்படம் நடக்கவில்லை.
அதன்பின், ரஜினியின் அடுத்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்றும் அப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே பேசப்பட்டு நின்று போயிருந்த படம் குறித்த பேச்சுவார்த்தையும் தொடங்கியிருப்பதாகச் சொல்லப்பட்டுகிறது.

அது என்ன?

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிக்கப்போகிறார் என்று பரபரப்பாகப் பேசப்பட்டது. 

சில காரணங்களால் அது தடைபட்டது. அதனால், லோகேஷ் கனகராஜ் கமலை வைத்தே விக்ரம் படத்தைத் தொடங்கிவிட்டார். அதன் படப்பிடிப்பு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. 

அப்படம் முடிந்தவுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினியை நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறதாம்.

அதேசமயம், ரஜினி அதிகச் சம்பள்ம் எல்லா நிறுவனங்களிலுமே சிக்கலாக இருக்கிறதென்கிறார்கள்.
சம்பளம் குறித்து எல்லா நிறுவனங்களுமே பேசியதால், அண்ணாத்த வெளியாகட்டும் அப்புறம் பார்க்கலாம் என்றாராம்.

இப்போது அண்ணாத்த படம் பெரிய வசூல் என்றாலும், அதற்கு எதிர்மறை விமர்சனங்கள் ஏராளம். அதையும் மீறி வசூல் வரக் காரணம், சன் பிக்சர்ஸின் விளம்பர உத்தி மற்றும் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது ஆகியவைதாம் காரணம் என்கிறார்கள். 

அதனால், ரஜினியை வைத்துப் படமெடுத்து இலாபம் சம்பாதிப்பது சிரமம் என்பதால் எல்லா நிறுவனங்களுமே ரஜினி சம்பளத்தைக் குறைக்கச் சொல்கின்றனவாம்.

என்ன நடக்கிறதெனப் பார்ப்போம்? 

Related Posts