சினிமா செய்திகள்

பிரபல நடன இயக்குநர் திடீர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி

தமிழ்த்திரையுலகில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்த கூல்ஜெயந்த் இன்று இயற்கை எய்தினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்துள்ளார்.

ஜெயராஜ் என்கிற இயற்பெயர் கொண்ட அவர் நடன இயக்குநர் ராஜு சுந்தரம் உதவியாளராக ஐந்து ஆண்டுகளில் நானூறு படங்களில் பணியாற்றியுள்ளார்.

காதல் தேசம் படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானவர். அப்படத்தில் இடம்பெற்ற ஓ மரியா மற்றும் கல்லூரிச் சாலை ஆகிய பாடல்களில் அவருடைய நடன இயக்கத்துக்கு நல்ல வரவேற்பு.

அஜீத்தின் வாலி படத்தில் ஏப்ரல் மாதத்தில், விஜய்யின் குஷி படத்தில் மொட்டு ஒன்று, ப்ரியமானவளே-வில் வெல்கம் பாய்ஸ், சூர்யா நடித்த உன்னை நினைத்து-வில் சாக்லேட் சாக்லேட, இயற்கை படத்தில் சீட்டுகட்டு ஆகிய பாடல்களின் வெற்றி இவருக்குப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

கடல்பூக்கள் படத்துக்காக சாந்தாராம் விருது, அபோர் த ஸ்டூடண்ட்ஸ் படத்துக்காக கிரிடிக் விருது, வேசம் படத்துக்காக கேரள அமிர்தா விருது ஆகிய விருதுகள் பெற்றுள்ளார்.

நடனப்பள்ளி ஒன்றையும் நடத்தி வந்த அவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

அவருடைய மரணம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மரணத்துக்கு திரைப்பட நடன இயக்குநர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது.

Related Posts