வீராபுரம் 220 – திரைப்பட விமர்சனம்
ஊருக்கு நல்லது செய்வதுபோல் நடித்து மக்களை ஏமாற்றி பொதுச்சொத்துகளைக் கொள்ளையடிக்கும் அரசியல் செல்வாக்குள்ள நபரை எதிர்க்கும் இளைஞர்கள் என்கிற கருவைக் கொண்டு உருவாகியிருக்கும் படம் வீராபுரம் 220.
நாயகன் அங்காடித்தெரு மகேஷ் சில காட்சிகளில் சிறப்பாகவும் பல காட்சிகளில் பாவமாகவும் இருக்கிறார். ஊரில் நடக்கும் விபத்துகள் குறித்த இரகசியம் தெரியும்போது பொங்குகிறார்.
நாயகி மேக்னா நன்றாக இருக்கிறார். இவர்போல ஆறுதலான காதலி இருந்தால் நல்லது என நினைக்க வைக்கும் வேடம்.
நாயகனின் நண்பர்கள் மற்றும் வில்லன் சதீஷ் ஆகியோர் ஏற்ற வேடங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ரித்தேஷ்-ஸ்ரீதர் என்கிற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் குறையில்லை.
பிரேம்குமார் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள் நன்று.
சமுதாய அக்கறையுடன் கூடிய கதையை எடுத்துக்கொண்ட இயக்குநர் செந்தில்குமார் திரைக்கதைக்கும் கூடுதலாக மெனக்கெட்டிருக்கவேண்டும்.











