சினிமா செய்திகள்

தமிழ்த்திரையுலக வரலாற்றில் முதன்முறையாக – விஜய்சேதுபதி படக்குழு புதிய முடிவு

டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ள துக்ளக் தர்பார் படத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன், சத்யராஜ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை, லலித்குமார் தயாரித்துள்ளார்.

இப்படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது.

இத்தகவலை தயாரிப்புத்தரப்பு மறுத்துவருகிறது.

ஆனாலும் அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதாகவே சொல்லப்படுகிறது.

இப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாகவிருக்கிறது என்கிறார்கள்.

படத்தை வெளியிடுவது மட்டுமின்றி, இதுவரை தமிழ்த்திரையுலகில் நடக்காத ஒரு புதிய விசயத்தையும் செய்யவிருக்கிறார்களாம்.

அது என்ன?

இப்படத்தின் பாடல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

அதனால், தமிழரத்திரையுலக வரலாற்றில் முதன்முறையாக இப்படத்தின் பாடல்களையே நேரடியாக ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியிடவிருக்கிறார்களாம்.

பாடலின் ஒலிப்பதிவை மட்டும் வெளியிடலாமா? அல்லது படமாக்கப்பட்டிருக்கும் பாடல் காட்சிகளையே வெளியிடலாமா? என்கிற ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றனவாம்.

எப்படியிருந்தாலும் முதன்முறையாக இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாவது மட்டும் உறுதி என்கிறார்கள்.

Related Posts