சினிமா செய்திகள் நடிகர்

கமல் ரஜினியைக் கேலி கிண்டல் செய்யத் தயாராகும் சத்யராஜ்

2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு படத்திற்காக இணைந்துள்ளது.

“சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ் சார்பாக எம்.ஞானசுந்தரி பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றார்.

இப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர் செல்வபாரதி எழுத, திரைக்கதை அமைத்து இயக்குகிறார் ஷிவ்ராஜ்

ஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகிற போது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல் நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் வெற்றிக்கூட்டணி முதன்முறையாக ஹிந்தியில் தடம்பதிப்பது குறிப்பிடத்தக்கது

இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது.

நடிகர்கள் கமல் மற்றும் ரஜினி ஆகியோர் அரசியலுக்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில் இப்படம் உருவாகிறது. இதில் நிச்சயம் அவர்களைக் கடுமையாக விமர்சனம் செய்வார்கள் என்று சொல்கிறார்கள்.

நடிப்பால் பிர்பலமானவர்கள் அரசியல்தலைவராக முடியாது என்று அண்மையில்தான் சத்யராஜ் கருத்து சொல்லியிருந்தார். அவர் நாயகனாக நடிக்கும் படம் என்பதோடு அரசியல் புரிதல் உள்ள இய்க்குநர் செல்வபாரதி கதை வசனம் என்பதால் நிச்சயம் கமல் ரஜினிக்குச் சிக்கல்தாம் என்கிறார்கள்.

Related Posts