சினிமா செய்திகள்

தலைவி படத்தில் ஒருவர் மட்டும் பெரும் பலவீனமாம் – அது யார்?

மறைந்த முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுத்து வருகிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய். ‘தலைவி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், செயலலிதாவாக கங்கனா ரணாவத்தும், எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்றதையடுத்து, இறுதிகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

‘தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா சிக்கல் காரணமாக அப்படத்தின் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.

வெளியீடு தள்ளிப்போனாலும் அப்படத்தின் பணிகள் தொடர்ந்து நடந்து வந்திருக்கிறது.

படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம்.

அண்மையில் வெகுசிலர் அப்படத்தைப் பார்த்திருக்கிறார்கள்.

படம் பற்றிய அவர்களின் கருத்து என்ன தெரியுமா?

ஜெயல்லிதாவின் வாழ்க்கை வரலாறு எடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு அவர் பற்றிய விளம்பரப்படம் எடுத்து வைத்திருக்கிறார்கள் என்பதுதான்.

மேலும் படம் குறித்து வரும் பேச்சுகள்…..,

படத்தில் கலைஞர் வேடத்தில் நடித்திருக்கும் நாசர், கலைஞர் குரலிலேயே குரல்பதிவு செய்திருக்கிறாராம்.

ஆர்.எம்.வீரப்பன் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி அசத்தியிருக்கிறாராம். படம் வெளியாகும்போது அவருக்கு மிகுந்த நற்பெயர் கிடைக்கும் என்கிறார்கள்.

எல்லோரும் அவரவர் வேடத்துக்கேற்ப பொருத்தமாய நடித்திருக்கிறார்கள். ஒரே ஒருவர்தான் பொருத்தமாகவே இல்லை என்கிறார்கள்.

அதுயார்? என்றால் கங்கணா ரனாவத்தாம். ஜெயல்லிதா வேடத்துக்கு அவர் கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லையாம்.

சரியாப்போச்சு போங்க.

Related Posts