மனசுல பெரியவன் மதுரைக்காரன் – மதுரை பெருமை பேசும் மற்றொரு படம்
காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் ஜி.காளையப்பன் தயாரிக்க ராஜரிஷி.கே இயக்கியுள்ள படம் மதுரை மணிக்குறவன்.
இப்படத்தில், தூத்துக்குடி, மதுரை சம்பவம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான ஹரிக்குமார் நாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்க மாதவிலதா கதாநாயகியாக நடித்துள்ளார்.
காளையப்பன், சுமன், ராதாரவி பருத்தி வீரன் சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், கௌசல்யா, பருத்தி வீரன் சுஜாதா, கஞ்சா கருப்பு, அஸ்மிதா, ராஜ்கபூர், டெல்லி கணேஷ் போன்றோரும் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு ஒளிப்பதிவு டி.சங்கர்,படத்தொகுப்பு வி.டி.விஜயன்,வசனம் வெற்றி விஜய்.
இளையராஜா இசையமைக்கிறார். அவருடைய இசையில்,படத்தில் இடம் பெற்றுள்ள 6 பாடல்களையும் கவிஞர் முத்துலிங்கம் எழுதியுள்ளார்.
மனசில பெரியவந்தான் மதுரக்காரன்… என்ற இளையராஜாவே பாடியுள்ள பாடலும்,கல்யாணம் செஞ்சு வச்ச மீனாட்சிக்கு வைரக்கல் மூக்குத்தி செஞ்சு போடு.. என்ற பாடலும் இரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடிக்கும்.
அனைத்துப் பாடல்களும் ஒரே நாளில் கம்போசிங் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை மணிக்குறவன் படத்தின் பின்னணி இசை முதல் படமாக இளையராஜா ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது என்ற பெருமையும் இப்படத்துக்கு உண்டு.

அதோடு, தன் ஸ்டுடியோவில் எளிய நிகழ்ச்சி நடத்தி இப்படத்தின் பாடல்களை வெளியிட்டு படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் இளையராஜா.
மதுரையில் நடந்த உண்மைச்சம்பவம் பல கொலைக் குற்றங்களில் நிகழும் பின்னணி கொண்டும் உருவாக்கப்பட்ட கதையை உடைய இப்படம்,
அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.











