Uncategorized

விஜய்சேதுபதி படத்தில் சத்யராஜ்

விஜய்சேதுபதி நடிப்பில் புது இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதியுடன் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

முழுக்க அரசியல் பின்னணி கொண்ட களமாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படம், புகழ்பெற்ற அரசியல் படமான அமைதிப்படை போல் அமைந்திருக்கிறதாம். தற்கால அரசியலைக் கேலி செய்யும் விதமாகக் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறதாம்.

அதற்கு வலுச்சேர்க்கும் விதமாக படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகர் சத்யராஜை நடிக்கவைத்திருக்கிறார்களாம்.முதலமைச்சர் வேடத்தில் நடித்திருக்கிறாராம் சத்யராஜ். அவருடைய லொள்ளுக்குத் தகுந்தாற்போல் வசனங்கள் இடம்பெற்றிருக்கின்றனவாம்.

இது படத்துக்கு மேலும் பலமூட்டுவதாகச் சொல்கிறார்கள்.

Related Posts