October 14, 2026
செய்திக் குறிப்புகள்

ராம்கோ சிமெண்ட் முதலாளி மகள் நாயகியாக அறிமுகமாகிறார்

பிரபல தொழில் நிறுவனமான ராம்கோ குழுமத்தின் தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் மகள் சந்தியா ராஜூ தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

புகழ்மிக்க சிறந்த நடனக்கலைஞரான சந்தியா ராஜூ இயக்குநர் ரேவந்த் கொருகொண்டா இயக்கியுள்ள “நாட்டியம்” என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

நாட்டியத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத்திரைப்படத்திற்கு இசை அமைப்பாளர் ஷ்ரவண் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார்.

பிரபல திரைப்பட விநியோகஸ்தரான தில்ராஜூ ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தெலுங்கு மொழி திரைப்படத்தை விநியோகம் செய்கிறார்.

அண்மையில் இந்த திரைப்படத்தின் போஸ்டரை ‘அப்போலோ’ மருத்துவமனை குழுமத்தைச் சேர்ந்த உபாசனா கமினேனி கொண்டிலா அறிமுகம் செய்துள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் டீசரை இன்று காலை பத்துமணிக்கு தெலுங்கு பட உலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். யூ டியூபில் வெளியிட்டுள்ளார்.

தொழில் துறையில் சிறந்து விளங்கும் தொழிலதிபர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜாவின் மகள் முறையாக நடனம் கற்று சிறந்த நடனக்கலைஞராக விளங்குகிறார்.

டீசரில் அவருடைய நடிப்பைப் பார்த்தோர் அனைவரும் திரைத்துறையிலும் முத்திரை பதிப்பார் என்று பாராட்டி வருகின்றனர்.

Related Posts