செய்திக் குறிப்புகள்

அறிவித்தவுடனே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்

சஹானா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.கே.குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் தீங்கிரை.

இதில் பல இளம் ரசிகைகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட நாயகன் ஶ்ரீகாந்த்தும், 8 தோட்டாக்கள் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் வெற்றியும் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார்கள்.

நாயகியாக அபூர்வா ராவ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி நடிக்கிறார்.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர் பிரகாஷ் ராகவதாஸ் இயக்குகிறார்.

சூழ்நிலை சிலரை இரையாக்கும். அதில் வெகுசில தருணங்களில் அந்த இரையே வேட்டையாடத் துவங்கி தீங்கு செய்யும் செயலே..தீங்கிரை.

சைக்கோ கிரைம் திரில்லர் ஜானரில் கொரியன் படங்களுக்கு கொஞ்சமும் சளைக்காத வித்தியாசமான கதைக்களத்துடன் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாக இருக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பரபரப்பாக மிகுந்த பொருட்செலவில் படமாக இருக்கிறது.

பிரகாஷ் நிக்கி இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக என்.கே. ராகுல். மணிகுமரன் சங்கரா படத்தொகுப்பை கவனிக்கிறார்.

படத்தின் பெயரே கவனிக்கத்தக்க மாதிரி அமைந்திருப்பதோடு கொரியன் படங்களுக்கு இணையான திரைக்கதை என்றும் சொல்லியிருப்பதால் அறிவித்தவுடனே எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது இந்தப்படம்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

Related Posts