விஜய் படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்குகிறாரா? உண்மை என்ன?
மாஸ்டர் படத்துக்கு அடுத்து விஜய் நடிக்கவிருக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குநர் நெல்சன் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
இதனால் விஜய்யின் அடுத்தபடத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகின.
அவர் விஜய்யிடம் கதை சொன்னதாகவும் அது அவருக்குப் பிடித்துவிட்டதாகவும் கூடச் செய்திகள் வந்தன.
இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா தரப்பில் கேட்டால், அந்தச் செய்தியில் சிறிதும் உண்மையில்லை.
எஸ்.ஜே.சூர்யா விஜய்யைச் சந்தித்தே பல மாதங்கள் ஆகின்றன. இப்போது இருவரும் சந்திக்கக்கூட இல்லாத நிலையில் இப்படி ஒரு செய்தி எப்படி வெளியானதென்றே தெரியவில்லை என்கிறார்கள்.
இரண்டாவதுபடம் கூட இன்னும் வெளியாகாத நிலையில் இயக்குநர் நெல்சனுக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது பலரைப் பொறாமையில் ஆழ்த்தியிருக்கிறது.
அப்படிப் பிடிக்காதவர்கள்தாம் இதுபோன்ற வதந்திகளைக் கிளப்பிவிடுகிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.











