சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனியின் புதிய படப்பெயர் – தன்னம்பிக்கையின் உச்சம்

கொரோனா சிக்கல் காரணமாக மார்ச் மாதம் பாதியிலிருந்து திரைப்படப் படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டன.
திரைப்படப் படப்பிடிப்புகள் நடக்காமல் கடந்த ஆறு மாதங்கள் கடும் நெருக்கடியில் இருந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகளை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது.

செப்டெம்பர் 3 ஆம் தேதியே புதியபடத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக விஜய் ஆண்டனி அறிவித்தார்.

என்னை நம்பி, என்னை வைத்து படம் தயாரித்துக் கொண்டிருக்கும் என் தயாரிப்பாளர்களுக்காகவும்,
என் இயக்குனர்களுக்காகவும் மற்றும் FEFSI தொழிலாளிகளுக்காகவும் நாளை முதல் சரியான பாதுகாப்புடன், நான் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளேன்.
நம்பிக்கையுடன்
நான்

என்று நடிகர் விஜய் ஆண்டனி ட்வீட் செய்திருந்தார்.

அவருடைய இந்த ட்வீட்டுக்கு பெருமளவில் ஆதரவு குவிந்தது.

ஆள், மெட்ரோ ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில்தான் விஜய் ஆண்டனி கலந்துகொள்வதாக அறிவித்திருந்தார்.

இந்தப்படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் என்கிற படநிறுவனம் தயாரித்து வருகிறது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இப்படத்துக்கு கோடியில் ஒருவன் என்று பெயர் வைத்திருக்கிறார்களாம். பெரும்பாலும் தன் படங்களுக்கு எதிர்மறைப் பெயர்களைச் சூட்டுவதில் ஆர்வம் காட்டும் விஜய் ஆண்டனி அதற்கு மாறாக இந்தப்படத்துக்கு மிகவும் நேர்மறையான பெயர் வைத்திருக்கிறார்.

Related Posts