சினிமா செய்திகள்

சிம்பு பார்த்திபன் இணைந்து நடிக்கும் படம் இதுதான்

நடிகர் பார்த்திபன் அண்மையில் அளித்த பேட்டியொன்றில் சிம்பு தொடர்பான கேள்விக்கு ‘அவர் ஒரு சுயம்பு’ என்று பாராட்டிப் பேசியிருந்தார்.

உடனே, பார்த்திபனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருடைய இல்லத்துக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் அனுப்பி வைத்துள்ளார் சிம்பு.

இது தொடர்பாக பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்ததாவது…..

‘சுயம்பு’ சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட,உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார். மிஸ்டர். சிம்பு நன்றியதில் மிஸ்டர் பண்பு ஆனார் எண்ணப் புத்தகத்தில்!. “எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் வொர்க் kபண்ணலேன்னு”. அதாகப்பட்டது…. விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!!”

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்திருந்தார்.

பார்த்திபன் ட்வீட்டின் மூலம், விரைவில் சிம்பு – பார்த்திபன் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது என்று பலரும் சொல்லிவந்தார்கள்.

அது என்ன படம்? என்பதை முதன்முதலாக இந்த உலகத்துக்கு நாம் சொல்கிறோம்.

மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்ற படம் அய்யப்பனும் கோஷியும்.அந்தப்படத்தின் இயக்குநர் தமிழில் கார்த்தியும் பார்த்திபனும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லியிருந்தார்.

ஆனால், கார்த்திக்கு வரிசையாகப் படங்கள் இருப்பதால் இப்படத்துக்குத் தேதிகள் ஒதுக்க முடியாத நிலை. எனவே இந்தப்படத்தின் தமிழாக்கத்தில் சிம்புவை நடிக்க வைக்க முடிவு செய்து அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றனவாம்.

மலையாள இயக்குநர் சொன்னபடி பார்த்திபன் இடம்பெற்றிருக்கிறார். இப்பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்து செயலாக்கம் பெறும் அளவுக்கு வந்துவிட்டதால்தான் விரைவில் இடியுடன் கூடிய மழை என்று பார்த்திபன் சொல்லியிருக்கிறார்.

தமிழில் இப்படத்தை இயக்கப்போவது யார்? மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில்.

Related Posts