நம்பியிருந்தோர் ஏமாற்றினர் – நேரடியாகக் களமிறங்கிய கமல்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘விக்ரம்’ திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இந்தப்படத்தில், விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விக்ரம் திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டுத்தேதி இயக்குநர் லோகேஷ்கனகராஜின் பிறநதநாளை முன்னிட்டு இன்று வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, இன்று காலை 7 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் ஜூன் 3 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் திரையரங்க வெளியீட்டிற்குப் பின்பான இணைய ஒளிபரப்பு உரிமையை ஹாட் ஸ்டார் இணையதளம் பெற்றிருக்கிறது.
அதற்காக நூறு கோடி கொடுப்பதாக ஹாட்ஸ்டார் கூற, அதற்கு ஒப்புக்கொள்ளாத கமல், 125 கோடி என்றால் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம். இதை எதிர்பாராத ஹாட்ஸ்டார் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. ஆனாலும் வேறுவழியின்றி அந்தத் தொகைக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்டுவிட்டார்களாம்.
நம்பியிருந்தவர்கள் ஏமாற்றியதால், கமலே நேரடியாகக் களமிறங்கி இந்த வியாபாரத்தைப் பேசி முடித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.











