செய்திக் குறிப்புகள்

2026 – 29 தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் – விவரம்

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.

அதன்படி, 2026 – 2029 ஆம் ஆண்டு காலகட்டத்துக்கான தேர்தல், பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற்றது.

இந்தத் தேர்தல் சென்னை அண்ணாநகரிலுள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அந்தச் சாலை முழுக்க திருவிழாக் கோலம் பூண்டு மிகவும் பரபரப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

மொத்தம் 1524 பேர் ஓட்டுரிமை பெற்றுள்ள உறுப்பினர்கள் ஆவர். இவற்றில் 1171 வாக்குகள் பதிவாகின.

ஓய்வு பெற்ற நீதிபதி இராஜேஸ்வரன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டது.

மொத்தமாக வாக்கு எண்ணிக்கை முடிந்து பிப்ரவரி 23 அன்று, தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிளை அதிகாரபூர்வமாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார் நீதிபதி இராஜேஸ்வரன்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

ஜி.எம்.தமிழ்க்குமரன்
தலைவர்

கமலக்கண்ணன்
துணைத் தலைவர்

ஆர்.கே.சுரேஷ்
துணைத் தலைவர்

எஸ்.கதிரேசன்
செயலாளர்

ஆர்.இராதாகிருஷ்ணன்
செயலாளர்

திருமதி.சுஜாதா விஜயகுமார்
இணைச் செயலாளர்

என்.சுபாஷ் சந்திர போஸ்
பொருளாளர்

மற்றும் செயற்குழு உறுப்பினர்கள்

1.தேனப்பன்
2. அழகன் தமிழ்மணி
3. பைஜாடாம்
4. சித்ரா லட்சுமணன்
5. ஏழுமலை
6. தாய் சரவணன்
7. முருகன் நீலகிரீஸ்
8. மகேந்திரன்
9.ஞானவேல்
10. இசக்கிராஜா
11. மாதேஷ்
12. தன சண்முகமணி
13. டேவிட்ராஜ்
14. சாலை சகாதேவன்
15. முரளி
16. ஜோதி
17. கபார்
18. ரஞ்சித்குமார்
19. பியாரிலால்
20. செந்தாமரை கண்ணன்
21. ராஜராஜன்
22. பாலாஜி
23. ஜெயசீலன்
24. முருகன்
25. அன்பு
26. பழனிவேல்

ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வெற்றி புறச் செய்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார் தலைவர் தமிழ்க்குமரன்.

Related Posts