பிக்பாஸ் யாஷிகா யோகிபாபு நடிக்கும் ஜாம்பி – இன்று தொடக்கம்
2016 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி நல்ல விமர்சங்களைப் பெற்ற படம் ‘மோ’ என்ற திகில் கலந்த நகைச்சுவைப் படம்.
இந்தப்படத்தின் இயக்குநர் புவன் நல்லான்.ஆர்.
இவருடைய அடுத்த படம் இன்று தொடங்கியிருக்கிறது. இந்தப்படமும் திகில் கலந்த நகைச்சுவைத் திரைப்படம் தான்.
உலகப்புகழ் பெற்ற ‘ஜாம்பி’ கதாபாத்திரத்தை மையமாக வைத்து இயக்குகிறார். ‘ஜாம்பி’ என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘எஸ்3’ பிக்சர்ஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் மற்றும் வி.முத்துக்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
யோகிபாபுவும்,பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்தும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இவர்களுடன் கோபி சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா, அன்பு தாசன், பிஜிலி ரமேஷ், ராமர், ‘லொள்ளு சபா’ மனோகர், சித்ரா உட்பட பலர் நடிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் மூலம் நகைச்சுவையில் பிரபலமானவர்கள்.
இப்படத்துக்கு இசை பிரேம்ஜி, ஒளிப்பதிவு விக்ரம் மோகன், கலை கண்ணன், படத்தொகுப்பு தினேஷ், சண்டைப் பயிற்சி ஓம் பிரகாஷ்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இயக்குநர் பொன்ராம் ‘க்ளாப்’ அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். மனோபாலா நடிப்பில் முதல் காட்சி படமாக்கப்பட்டது.
இந்தப்படத்தின் இயக்குநர் மற்றும் படத்தின் பெயர் காரணமாகப் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.











