ரஜினி படத்தில் யோகிபாபு – சிக்கலில் சில படங்கள்
நகைச்சுவை நடிகர்களில் இப்போது முன்னணியில் இருப்பவர் யோகிபாபு.
அவர் கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு ஜாம்பி ஆகிய படங்களோடு, விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் அவர் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இப்படியாக கைவசம் படத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடிக்கிறார்.
ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட படப்பிடிப்புகள் இருந்தாலும் காலையில் ஒரு படப்பிடிப்பு, மாலையில் ஒரு படப்பிடிப்பு இரவில் மற்றொன்று என எல்லாப் படங்களுக்கும் போய்வந்துகொண்டிருக்கிறாராம்.
இதனால் எல்லாப்படங்களுமே சிக்கல் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதாம்.
இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறதாம்.
அந்தப்படத்தில் யோகிபாபு கண்டிப்பாக இருக்கவேண்டும் என்று ரஜினி சொல்லிவிட்டதால் அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் ரஜினி படத்தில் நடிக்க யோகிபாபு போகவிருப்பதால் அந்தத் தேதிகளில் யோகிபாபுவை வைத்து படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தவர்கள் சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
ஏனெனில் யோகிபாபு சென்னையில் இருந்தால் எல்லாப்படங்களுக்கும் போய்விடுவார், மும்பையில் இருந்தால் அப்படி வரமுடியாது என்பதால் நான்கு படக்குழுவினர் திகைத்துப் போயிருக்கிறார்களாம்.











