வடிவேலு நடிக்கும் புதிய படம், ஆச்சரியத்தில் கோடம்பாக்கம்
ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் வெற்றிக்குப் பிறகு தவிர்க்கமுடியாத கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் விமல்.
ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பப்பாங்கான கதைகளில் நடிக்க நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார் நடிகர் விமல்.
இந்த வருடத்தில் விமல் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கு மேல் களம் காண இருக்கின்றன. இயக்குநர் எழில் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார்.
சுராஜ் இயக்கத்தில் விமல்-வடிவேலு ஆகிய இருவரும் நடிக்கும் படம் ஒன்று மருதமலை பாணியில் கலக்கலாக உருவாகவுள்ளது.
இதுதவிர ‘வெற்றிவேல்’ இயக்குநர் வசந்தமணி, ‘தமிழன்’ பட இயக்குனர் மஜித், ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் விமல்.
‘மன்னர் வகையறா’ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னிராசி’ படம் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கிறது.
சற்குணம் இயக்கத்தில் ’களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு நடித்துவந்தார் விமல். கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ’களவாணி-2’, படத்தின் படப்பிடிப்பு வரும் மே-3ஆம் தேதி முதல் மீண்டும் முழுவீச்சில் துவங்குகிறது.
வடிவேலு கதாநாயகனாக இருக்கும் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று ஒதுங்குகிறார். இன்னொரு பக்கம் விமலுடன் நடிக்கிறார் என்பது வியப்பான செய்தியாக இருக்கிறது.











