தெலுங்கைவிட தமிழில் நீளம் அதிகம் – வாத்தி இயக்குநர் தகவல்
சித்தாரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர்சினிமாஸ் சார்பில் நாகவம்சி எஸ்.சாய் சௌஜன்யாதயாரிப்பில் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகியுள்ள படம் வாத்தி.
தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரிஇந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
சம்யுக்தா கதாநாயகியாகநடித்துள்ளார். மேலும் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளி மது, நார ஸ்ரீநிவாஸ், பம்மி சாய், ஹைப்பர்ஆதி, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்டராஜேந்திரன், ஹரிஸ் பெராடி, பிரவீணா மற்றும் பலர்நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநர் வெங்கி அட்லூரி கூறியதாவது…….
2020ல்கொரோனா தாக்கம் துவங்கிய பிறகு கிடைத்தஇடைவெளியில் அடுத்த படத்திற்கான சில ஐடியாக்களையோசிக்கத் துவங்கினேன்.
அந்த சமயத்தில் மாணவர்களுக்குநேரடி வகுப்புகள் நடத்த முடியாததால் ஆன்லைன்வகுப்புகளை தொடங்கினார்கள். ஆனால் கட்டணத்தைபாதியாக குறைப்பதற்குப் பதிலாக முன்பை விட அதிகஅளவில் உயர்த்தினார்கள். பள்ளிப்பேருந்துகளைஇயக்காமலேயே பேருந்துக்கான கட்டணங்களைவசூலித்தார்கள்.
தொண்ணூறுகளின் இறுதியில் ஐடி கம்பெனிகள், மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் உருவாக ஆரம்பித்தசமயத்திலேயே அரசாங்கம் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவகல்லூரிகளை அதிகப்படுத்தியது. சில பேர் இதைபயன்படுத்தி கோச்சிங் சென்டர், தனி பயிற்சி வகுப்புகள்என பயனடைய ஆரம்பித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளிகல்லூரிகளின் கட்டணமும் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.
கல்வி என்பது எப்போதும் மக்களின் உணர்ச்சி பூர்வமானஒரு விஷயமாகவே இருக்கிறது. தங்களது பிள்ளைகளுக்குதரமான கல்வியை தரவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள்.அதனால் கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை நம்பிநடுத்தர வர்க்கத்துப் பெற்றோர்கள் கூட, தங்கள்குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு ஆரவம்காட்டினார்கள்.
அதேசமயம் அரசுப் பள்ளிகளிலும் கொஞ்சம்தரம் குறைய ஆரம்பித்தது. ஆனால் அரசுப்பள்ளிஆசிரியர்களுக்கு திறமையில்லை என்பதால் அல்ல.அவர்களுக்கான சரியான ஊதியம் தரப்படவில்லை என்பதுதான் முக்கியமான காரணம்.
கல்வி என்பது இலாப நோக்கு இல்லாத ஒரு சேவை என்றுசொல்வார்கள். ஆனால் அதை வியாபாரமாகவேஆக்கிவிட்டார்கள். இன்னொரு பக்கம் அறக்கட்டளைதுவங்கி படிப்புக்கு உதவி செய்வதாக ஒரு பிம்பத்தைஉருவாக்கினார்கள். கல்வியை அதில் உள்ள ஓட்டைகளைபயன்படுத்தி பட்டவர்த்தனமான வியாபாரமாக்கி விட்டார்கள்.
இதையே முழுப்படமாகச் சொல்லாமல் அதேசமயம்மக்களுக்கு சொல்லவேண்டிய சில செய்திகளையும் சேர்த்துஒரு பொழுதுபோக்குப் படமாக சொல்லும்போது அவர்களைஎளிதாகச் சென்றடையும்.
நான் எப்போதும் பொழுதுபோக்குபடங்களையே விரும்புகிறேன். இந்தப்படத்தில் கல்வி முறைமாற வேண்டுமா? அல்லது பெற்றோர்கள் மாற வேண்டுமா?என்பதை விட இதற்கு ஒரு நல்ல தீர்வு ஒன்றைச்சொல்லிஇருக்கிறோம்.
இது துவக்கத்தில் இருந்தே இருமொழி படமாகவேதுவங்கப்பட்டது. கொரோனா முதல் அலை முடிவுக்கு வந்தசமயத்தில் 2021-ல் என்னுடைய ரங்தே படம் ரிலீஸ் ஆனது.அதைத் தொடர்ந்து இரண்டாவது அலையும் துவங்கியது.அந்த சமயத்தில் நான் உருவாக்கி வைத்திருந்த இந்தகதைக்கு ஒரு பெரிய ஹீரோவை அணுகும் எண்ணமே என்மனதில் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் வம்சி இந்த கதைமீது ரொம்பவே நம்பிக்கையுடன் இருந்தார். தனுஷைசந்தித்து கதை சொல்லும்படி ஊக்குவித்து அதற்கானவாய்ப்பையும் உருவாக்கிக் கொடுத்தார். இப்படி ஒருமிகப்பெரிய வாய்ப்பை நான் சற்றும் எதிர்பார்க்கவேஇல்லை.
அதே சமயம் அந்த நேரத்தில் ஜகமே தந்திரம் மற்றும்பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக நடித்து வந்தார் தனுஷ்.அப்படியே அவர் நடிக்க ஒப்புக்கொண்டாலும் இந்தபடத்தை துவங்க எவ்வளவு நாளாகும் என்கிற கேள்வியும்கூடவே இருந்தது. ஆனாலும் ஒரு பெரிய ஹீரோவைசந்தித்து கதை சொல்ல போகிறோமே என்கிற சந்தோஷமேஅதிகமாக இருந்தது.
ஆனால் அவரைச் சந்தித்துக் கதை சொன்ன பின்னர் அவர்தனக்கு கதை பிடித்து இருப்பதாகவும் எப்போது என்னுடையதேதிகள் உங்களுக்கு வேண்டும் என்று கேட்டபோதுஎன்னால் அதை நம்பவே முடியவில்லை. தனுஷும் ஒருஇயக்குநர் என்பதால் எங்களுக்கு அவருடன் இணைந்துபணியாற்றுவது ரொம்பவே எளிதாக இருந்தது. “நேரம்பொன்னானது.. உங்களுடைய நேரத்தை நானோஎன்னுடைய நேரத்தை நீங்களோ வீணடிக்காமல் வேலைபார்ப்போம்” என்று தெளிவாக்க் கூறிவிட்டார்.
படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட நாட்களில் அவரதுகாட்சி படமாக்கி முடிக்கப்பட்டாலும் கூட கேரவன் பக்கம்அவர் போகவே இல்லை. எங்களுடனேயே அவர் இருந்துஅடுத்த காட்சிக்கான வேலைகளில் மட்டுமே கவனம்செலுத்தினார்.
தமிழ் எங்களுக்குப் புதிது என்பதால் படத்தின்வசனங்களில் மிகுந்த கவனம் செலுத்தினார் தனுஷ். தமிழில்ஏதாவது வசனங்களை மாற்றம் செய்ய வேண்டுமானால் கூடஅவற்றை எங்களுக்கு தெலுங்கில் எழுதிக்காட்டி இறுதிசெய்து அதன்பிறகு தமிழில் அந்த வசனங்களை பேசினார்.
படத்தின் கதைக்கரு, களம் என தமிழ், தெலுங்கு இரண்டுமொழிகளுக்கும் ஒன்றுதான் என்றாலும் சில விஷயங்களில்கொஞ்சம் மாறுதல்களைச் செய்துள்ளோம். அந்த வகையில்தெலுங்குப் படத்தை விட தமிழ்பப்டத்தின் நீளம் இரண்டுநிமிடங்கள் கூடுதலாகவே இருக்கும்.
சமுத்திரக்கனி இந்தபடத்தில் படத்தில் பள்ளிகள் மற்றும் கோச்சிங் பயிற்சிநிறுவனங்களை நடத்துபவராக ஒரு நெகட்டிவ்கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சமுத்திரக்கனியிடம் இந்தகதை பற்றிக்கூறியபோது மீண்டும் ஒரு நெகட்டிவானகதாபாத்திரமா என்று ஆரம்பத்தில் தயங்கினார் ஏனென்றால்எப்போதுமே அவர் இந்தக்கல்வி முறை குறித்து பலபடங்களில் கேள்வி எழுப்பி வருகிறார்.
இருந்தாலும் இந்தக்கதை அவருக்கு ரொம்பவே பிடித்துவிட்டது. தனுஷுக்கும் அவருக்கும் இடையே ஒரு நல்லபுரிதல் இருக்கிறது. ஏற்கனவே தந்தை மகன்கதாபாத்திரங்களில் அவர்கள் நடித்திருந்தாலும் இந்தபடத்தில் இவர்கள் எதிர் எதிராக நடித்துள்ளது நிச்சயம்வித்தியாசமாக இருக்கும்.
அரசுப்பள்ளியில் பணிபுரியும்உயிரியல் ஆசிரியராக சம்யுக்தா நடித்துள்ளார். தனதுபள்ளிக்கு உதவி செய்ய நினைத்தாலும் தனக்கான சிலஎல்லைகள் கட்டுப்பாடுகள் காரணமாக எதுவும் செய்யமுடியாத ஒரு கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.
இந்தக்கதை 97-ல் இருந்து 2000 வரை உள்ளகாலகட்டத்தில் நடைபெறுவதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப்படம் துவங்கப்பட்ட சமயத்தில் தமிழ்நாட்டில்தளர்வுகள் அதிகம் வழங்கப்படாததால் பெரும்பாலும்ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்இந்தப்படத்திற்காக 90களின் காலகட்டத்தை உணர்த்தும்விதமாக செட் அமைத்து படமாக்கினோம். பாரதிராஜா இந்தபடத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில்நடித்துள்ளார். அவர் இயக்கிய படங்களில் வேதம் புதிதுஎனக்கு ரொம்பவே பிடித்த படம்.
சமீப காலமாக தெலுங்கு இயக்குநர்கள் தமிழில் படம்பண்ண விரும்புகிறார்கள். இது இந்த கோவிட் காலகட்டம்ஏற்படுத்திய மாற்றம். கோவிட் அனைத்துதிரையுலகினரையும் ஒன்றாக்கி விட்டது. இந்தகாலகட்டத்தில் வெளியான அசுரன், கர்ணன், திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் தெலுங்கு திரையுலகில்அதிகம் வரவேற்பைப் பெற்றன.
90களின் கல்வி முறையில்நடைபெற்ற சில விஷயங்களை மையப்படுத்தி இந்தபடத்தை உருவாக்கி இருந்தாலும் இப்போது வரை அந்தவிஷயங்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்றால்நிச்சயமாக இல்லை என்று தான் சொல்வேன்
இவ்வாறு அவர் கூறினார்.











