துக்ளக் தர்பார் ரிலீஸ் தேதி இதுதான்
அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இதில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா மற்றும் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளரும், ‘கோப்ரா’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சீயான் 60’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்து வரும் லலித் குமார் தயாரித்து வருகிறார்.
கொரோனா ஊரடங்குக்குப் பின் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. ஒரு கட்டப்படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு டிசம்பர் முதல்வாரத்தில் தொடங்கி இப்போது மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்துவிட்டதாம்.
படப்பிடிப்புக்குப் பிறகான பணிகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன.
இதனிடையே இப்படத்தை வெளீயிட்டுத் தேதியை உறுதி செய்து அதற்கேற்ப வேலைகளை விரைவுபடுத்தச் சொல்லியிருக்கிறாராம் தயாரிப்பாளர்.
ஏப்ரல் 2 ஆம் தேதி புனித வெள்ளி அரசு விடுமுறை நாளையொட்டி இப்படத்தை வெளியிடவிருக்கிறார்களாம்.
மாஸ்டர் படத்துக்கு அடுத்து விஜய்சேதுபதி நடிக்கும் இந்தப்படம் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டிருப்பதால் விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனராம்.











