இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படம் வேறுவிதமாகப் பார்க்காதீர்கள் – நட்டி வேண்டுகோள்
நடிகர் தம்பிராமையா மகன் உமாபதிராமையா இயக்கத்தில்,நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்க,பரபரப்பான அரசியல் நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “டிஎன் 2026” தங்க நட்சத்திரம்.
நட்டி நட்ராஜ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில்,சிருத்தா ராவ்,சாந்தினி தமிழரசன்,யாஷிகா ஆனந்த் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர்.
இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர்,இளவரசு,தம்பி ராமையா ஆகியோர் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.மேலும் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன்,பிக்பாஸ் முத்துக்குமரன்,ஆதித்யா கதிர்,சித்ரா லட்சுமணன்,தலைவாசல் விஜய்,வையாபுரி, வடிவுக்கரசி,விஜி சந்திரசேகர்,ஸ்ரீஜா ரவி,இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாண்டி சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.
இப்படத்தின் திரைக்கதை இயக்கம் – உமாபதி ராமையா, கதை – தம்பி ராமையா, இசை – தர்புகா சிவா,ஒளிப்பதிவு – பிஜி.முத்தையா, படத்தொகுப்பு – அரள்.ஆர்.தங்கம்கலை – என்.கே.ராகுல், சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ,நடனம் – சாண்டி.
கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில், அரசியல் மாநாடு போல வடிவமைக்கப்பட்ட அரங்கில் ஏப்ரல் 3 ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிகழ்வினில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா பேசியதாவது..,
நான் நடுவில் சிலகாலமாக ஒளிப்பதிவு செய்யவில்லை.தம்பிராமையா சார்தான் முதலில் இந்தப்படத்துக்கு என்னைக் கூட்டிவந்தார். அதற்குப்பிறகுதான் நான் தொடர்ந்து படங்களுக்கு கமிட்டாக ஆரம்பித்தேன்.இந்தப்படத்தைப் பொறுத்தவரையில்,நாங்கள் ஒரு பிரம்மாண்டமான விஷுவல்ஸ் கொடுத்திருக்கோம்.அதேநேரத்தில்,ஒரு ஸ்மார்ட்டான டைரக்டருடன் வேலை செய்தது எனக்கு ஒரு நல்லஅனுபவம்.இந்தப்படத்தில் நடித்த ஹீரோ நட்டி,அவர் ஏற்கனவே ஒரு பெரியசினிமாடோகிராஃபர்.அவருடைய படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்திருக்கேன்.அதனால் அவருடன் வேலை செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கமாக இருந்தது. ஆனால் ஒவ்வொரு இடத்திலும் அவர் எனக்கு ஒரு நல்லவழிகாட்டியாக இருந்து உதவினார்.அனைவருக்கும் நன்றி என்றார்.
படத்தொகுப்பாளர் அரள் ஆர்.தங்கம் பேசியதாவது..,
இதுதான் எனது முதல் மேடைஅனுபவம்.அதனால் சிறிது பதட்டமாக உள்ளது.முதலில் இந்தவாய்ப்பை அளித்த இயக்குநர் உமாபதி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.அதேபோல் தம்பிராமையா சார்,நட்டி சார்,எம் எஸ் பாஸ்கர் சார் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி.இந்தப்படம் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது என்று நம்புகிறேன்.அனைவரும் திரையரங்கிற்குச் சென்று படம் பாருங்கள்.பார்த்தபிறகு உங்கள் கருத்துகளை கண்டிப்பாகப் பகிருங்கள். நன்றி என்றார்.
நடிகை ஷிரித்தா பேசியதாவது..,
இன்று இந்தவாய்ப்பை எனக்கு வழங்கிய கண்ணன் சார் அவர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.அதேபோல், தம்பிராமையா சார் அவர்கள் முதலில் என்னைத் தொடர்புகொண்டு,“நம்பிக்கையுடன் வாருங்கள்” என்று கூறி இந்தவாய்ப்பை அளித்ததற்கும் எனது நன்றி.இந்தப்படத்தின் மூலம் நான் நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டேன்.இந்தப்படம் ஒரு பெரிய
வெற்றிப் படமாக இருக்கும் என்று நம்புகிறேன்.ஒரு புதியவராக,பெரிய நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருந்தது.குறிப்பாக,உமாபதி அவர்களுடன் வேலை செய்த அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அவர் மிகவும் உற்சாகமான,மகிழ்ச்சியான நபர்.அதனால் ஒருநாள்கூட வேலை செய்தபோது அழுத்தமாக உணரவில்லை.ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாகவே சென்றது.
இன்றைக்கு நான் ஒரு பெரிய இரசிகையாக யாருக்கு மாறியிருக்கேன் என்றால்—நிச்சயமாக அது நட்டி சார்தான்.நீங்கள் டீசரை பார்த்தபிறகு இதை உணர்ந்திருப்பீர்கள்.இந்தப்படத்தில் அவர் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல்மொழி,தனித்தனி வெளிப்பாடு.ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு அவர் மாறும் விதம்,ஒரு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீர் அந்த பாத்திரத்தின் வடிவத்தை எடுப்பதுபோல் இருந்தது.அவ்வளவு சிறப்பாக அவர் அனைத்து கதாபாத்திரங்களிலும் பொருந்தியுள்ளார்.நட்டி சார் இன்றுமுதல் நான் உங்கள் பெரிய இரசிகை.இந்தப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.அனைவரும் திரையரங்கிற்குச் சென்று படம் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி என்றார்.
நடிகர் இளவரசு பேசியதாவது..,
ஒரு திரைப்படத்தில் நடித்து,அந்தப்படம் முறையாக வெளியேறி வெற்றிபெறுவது அதைவிடப் பெரிய சந்தோசம்,எங்களைப் போன்ற திரைப்படத் துறையினருக்கு வேறு எதுவும் இல்லை.ஒருபடத்தை உருவாக்குவது முக்கியமல்ல,அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் மிகமுக்கியம்.ரவி சார்,இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக மட்டுமல்ல,இந்தநிகழ்ச்சியை இவ்வளவு அழகாகத் திட்டமிட்டு,படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் எடுத்த முயற்சி,அது உங்கள் சினிமா மீது உள்ள அன்பைத் தெளிவாகக் காட்டுகிறது.ஒரு சினிமாக்காரராக,சினிமா எப்போதும் உங்களுக்குத் துணையாக இருக்கவேண்டும் என்று மனமார வேண்டுகிறேன்.
இந்தப்படத்தின் இயக்குநர் உமாபதி என் நண்பரின் மகன் என்பதற்காகவோ,எனக்கு வாய்ப்பு கொடுத்தவர் என்பதற்காகவோ நான் பாராட்டவில்லை.ஒரு திரைப்படத்தை எப்படிக் கையாளவேண்டும்,அதன் மேலாண்மை,அதன் வடிவமைப்பு எல்லாவற்றையும் தெளிவாக புரிந்துகொண்டு,மிகப்பொறுப்புடன் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.நீங்கள் படம் பார்க்கும்போது நான் சொல்வதின் அர்த்தம் உங்களுக்குப் புரியும்.
புதியகலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து,அவர்களை ஊக்குவிப்பது மிகவும் அவசியம்.இந்தப்படத்தில் அவர்கள் தங்கள் திறமையை நிரூபித்துள்ளனர்.இந்தப்படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன்,ஒரு நடனம் ஆடியிருக்கிறேன்,ஒரு சண்டைக்காட்சியிலும் நடித்திருக்கிறேன்.இதற்காக பாடல்,நடனம்,சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி.
நானும்,எம்.எஸ்.பாஸ்கர் சார்,ராமையா சார் மூவரும் இந்தவயதில் பல அனுபவங்களைக் கடந்துவந்தவர்கள்.அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றைத் தாண்டி,ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு இந்தப்படத்தில் நடித்துள்ளோம்.இயக்குநர் உமாபதி இந்தப் படத்தில் கதை,வசனம்,அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார்.படம் மிகவும் சுவாரஸ்யமாக உருவாகியுள்ளது.டிரெய்லர் பார்த்த பிறகு பலகேள்விகள் எழுந்திருக்கும்.அந்தகேள்விகள் இன்னும் அதிகரித்தால்,அது எங்களுக்கு மகிழ்ச்சி.இந்தப்படம் ஓடி, வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் ஆசை.இந்தப்படத்தின் கதாநாயகி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.இந்தப்படம் பற்றி இன்னும் நிறையப் பேசவேண்டியுள்ளது.ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்.இந்தப்படம் பெரியவெற்றி பெறும் என்று நம்புகிறேன்.நன்றி என்றார்.
சண்டைப்பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ பேசியதாவது..,
இப்படத்தின் இயக்குநர் உமாவும் நானும் சிறுவயது முதல் நெருங்கிய நண்பர்கள்.அவரது வீட்டிலேயே எப்போதும் சேர்ந்து இருந்தோம். இந்தப்படத்திற்காக அவர் கதை கூறியபோது,அது எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.பொதுவாக நாயகர்களே சண்டைக்காட்சிகளில் நடிப்பார்கள்.ஆனால் இந்தப்படத்தில் நான் நட்டி சார்,பாஸ்கர் சார்,இளவரசு சார் ஆகியோருடன் சேர்ந்து நடித்திருக்கிறேன்.அந்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவும், நகைச்சுவையால் நிரம்பியதாகவும் இருந்தது.இந்தவாய்ப்பை அளித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.எங்கள் கதாநாயகன் நட்டிசார் இந்தப்படத்தில் புதியதோற்றத்தில் மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். சண்டைக்காட்சிகளிலும் அவர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார்.இளவரசு சார்,பாஸ்கர் சார் ஆகியோருக்கும் என் நன்றி.கடுமையான வெயிலிலும் அனைவரும் உழைத்து இந்தக்காட்சியை உருவாக்கினோம்.அதன் பலன் திரையில் நிச்சயமாகத் தெரியும்.இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர்,தொகுப்பாளர் மற்றும் முழுகுழுவினருக்கும் நன்றி.இந்தவாய்ப்பை அளித்ததற்கு மீண்டும் நன்றி என்றார்.
நடன இயக்குநர் பிரவீன் பேசியதாவது..,
இந்தமேடையில் பேசுவது எனக்குக் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது.உமாவை நீங்கள் ஒரு இயக்குநராகப் பார்க்கிறீர்கள்.ஆனால் நான் அவரை முதலில் ஒரு சிறந்த நடனக்கலைஞராகத்தான் அறிந்தேன்.என் வாழ்க்கையில் நான் சந்தித்த பலரும் சிறந்த நடனக்கலைஞர்கள்.ஆனால் இன்று பலவருடங்களுக்குப் பிறகு,அவர்களை ஒரு இயக்குநராகவும்,ஸ்டண்ட் இயக்குநராகவும் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
உமா,இந்தவாய்ப்பை எனக்கு அளித்ததற்கு மிக்கநன்றி.நான் எப்போதும் உங்களுக்கு நன்றியுடன் இருப்பேன்.பெரியநடிகர்கள் முன் பேசுவது எனக்கு இன்னும் கொஞ்சம் பதட்டமாக இருக்கிறது.இந்தப்படத்தில் ஒருபாடல் பழையகால பாணியில் இருக்கவேண்டும் என்று உமா கூறினார்.அதற்காக அவர் தானே அந்த நடனத்தை செய்துகாட்டி விளக்கினார்.அவரிடமிருந்து நான் நிறைய விசயங்களைக் கற்றுக்கொண்டேன்.ஒளிப்பதிவாளர் சார்,என்னை பொறுமையாக வழிநடத்தியதற்கு நன்றி.படத்தொகுப்பாளர் சார்,உங்கள் சிறந்தபணிக்கு நன்றி.இந்தப்படத்தின் வெற்றியை அனைவருடனும் சேர்ந்து கொண்டாட ஆவலாக இருக்கிறேன்.நன்றி என்றார்.
நடிகை விஜி சந்திரசேகர் பேசியதாவது..,
இந்தப்படம் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது.நான் இதுவரை நடித்த எந்தப்படத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்ததில்லை.இந்தப்படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது.என்னை இந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு ராமையா சார் அவர்களுக்கு நன்றி.படப்பிடிப்பில் நீங்கள் சொன்ன ஒருவரி எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தது. இயக்குநர் உமாபதி அவர்கள் மிகத்திறமையானவர்.அவரின் இயக்கமும் கதையை காட்சிப்படுத்தும்விதமும் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப்படத்தில் முழுகுழுவின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருந்தது.இந்தப்படத்தின் உணர்வு அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.இதில் நல்லசெய்திகளும்,பொழுதுபோக்கும் சேர்ந்து இருக்கின்றன.இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன்.இந்தப்படம் சிறந்தபடங்களில் ஒன்றாக இருக்கும்.இந்தவாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.நட்டி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது.இந்தப்படத்தில் நான் “க்ளூக்கோஸ் மாமி” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும்,சுவாரசியமானதும் ஆகும்.இந்தப்படத்தின் ஒருபகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்.எல்லோரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நடிகர் ஆதித்யா கதிர் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.இந்தமேடையில் பேசுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.ஸ்டண்ட்மாஸ்டர் சொன்னமாதிரி,இந்தப்படத்தில் எல்லாரும் சண்டை போட்டிருக்காங்க.இளவரசு சார்,எம்.எஸ்.பாஸ்கர் சார்,ராமையா சார் எல்லாரும் தங்களுடைய பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.அந்தஅளவுக்கு ஒவ்வொருவரும் உழைத்ததுதான் இந்தப்படத்தின் வெற்றி.இதைப்பார்க்கும்போது ஒரு பெரியகுழுவின் முயற்சி என்று சொல்லலாம்.அதேமாதிரி ஒரு அரசியல்கூட்டத்தில் இருப்பதுபோல ஒரு உற்சாகம் இங்கே தெரிகிறது.அங்கே எல்லோரும் “நாம்தான் ஜெயிப்போம்” என்ற நம்பிக்கையோடு இருப்பார்கள்.அதேநம்பிக்கை இந்தப்படக்குழுவிலும் தெளிவாகத் தெரிகிறது.அந்த நம்பிக்கையே இந்தப்படத்தின் பெரியபலம்.உமாபதி அண்ணா இந்தவாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி.அதைவிட தம்பிராமையா சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார்.நான் செய்த ஒவ்வொரு விசயத்தையும் அவருடன் பகிர்ந்துகொண்டேன்.அவர் எப்போதும் “நீ பெரியநிலைக்கு வருவாய்” என்று உற்சாகம் கொடுத்தார்.இந்தச்சிறிய கதாபாத்திரத்திற்குக் கூட என்னைப் பரிந்துரைத்தது அவர்தான் என்று நினைக்கிறேன்.அவரின் நம்பிக்கை எனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது.ஒரு நல்லஆதரவு கிடைத்தால் நாம் இன்னும் முன்னேறமுடியும்.இந்தப்படம் உங்களுக்கு கண்டிப்பாக வெற்றிதரும் என்று நம்புகிறேன்.நீங்கள் ஒரு பெரியஇயக்குநராக வருவீர்கள்.எல்லாரும் இந்தப்படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி என்றார்.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது..,
இந்தமேடையில் நிற்கும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.இங்கு இருக்கும் ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்துவமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது.அதைப்பார்த்து நான் மிகவும் வியந்தேன்.மேடையில் அமர்ந்திருக்கும் இந்தக்கலைஞர்கள் அனைவரிடமிருந்தும் நான் பலவிசயங்கள் கற்றுக்கொண்டேன்.அவர்களைப் பார்த்ததால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். இரண்டாவது காரணம் உமா – அவருடைய சிரிப்பு எல்லோரையும் கவரும்.சிலநேரங்களில் சிரிப்புகூட வாழ்க்கையை முன்னோக்கி கொண்டுசெல்லும் சக்தியாக இருக்கும்.அந்தமாதிரியான ஒரு மகிழ்ச்சி இந்தப்படத்திலும் இருக்கிறது.
எங்கள் நண்பர்கள் எழுதிய பாடலும் அதேஉணர்வைத் தருகிறது.பிரபுசிவா சார் மற்றும் சேதன்சங்கர் அவர்களுக்கு என் நன்றி. தமிழ்நாட்டின் சிறந்த கலைஞர்களுடன் அமர்ந்திருப்பது பெருமை அளிக்கிறது.இந்தவாய்ப்பை நான் ஒரு பெரியஅதிர்ஷ்டமாக நினைக்கிறேன்.இந்தப்பாடலை அனைவரும் பார்த்து இரசிக்கவேண்டும்.இதில் இருக்கும் மகிழ்ச்சி உங்களையும் நிச்சயம் கவரும். அனைவரும் சந்தோசமாக வெளியேறுவீர்கள் என்று நம்புகிறேன்.எல்லாக்கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.நன்றி என்றார்.
நடிகை இந்திரஜா ரோபோசங்கர் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.இந்தமேடை எனக்கு ஒரு நன்றி சொல்லும் முக்கியமான தருணம்.முதலில் தம்பிராமையா பெரியப்பாவுக்கு என் மனமார்ந்த நன்றி.அவர் எங்கள் குடும்பத்துக்கு ஒரு பெரியஆதரவாக இருந்தவர்.அப்பாவுக்கு அடுத்ததாக எனக்கு நம்பிக்கை கொடுத்தவர் அவர்தான்.“இது உன்வீடு,நீ எப்போதும் திரும்பிவரலாம்” என்ற அவரது வார்த்தை எனக்குத் தைரியம் தந்தது. அந்த நம்பிக்கையால்தான் இன்று நான் இங்கே நிமிர்ந்து நிற்கிறேன்.அடுத்து கண்ணன்ரவி சார் அவர்களுக்கு என் நன்றி.எங்களுக்கு மிகவும் தேவையான நேரத்தில் அவர் செய்த உதவி மறக்கமுடியாதது.நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக ஆதரவு அளித்தார். அதற்காக எங்கள் குடும்பம் எப்போதும் நன்றியுடன் இருக்கும்.
என் உமா அண்ணாவுக்கு என் சிறப்பு நன்றி.எனக்கு உடன்பிறந்தவர்கள் இல்லையென்றாலும்,அவர் எப்போதும் அண்ணனாக இருந்தார். எந்தநிலையிலும் என்னைக் கைவிடாமல்,கையைப்பிடித்து இங்கேவரைக்கும் கொண்டுவந்தார்.இன்று அவரை இயக்குநராகப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த பெருமை மற்றும் சந்தோசம்.இந்தமேடையில் இருக்கும் அனைத்துப் பெரியகலைஞர்களுடனும் நிற்பது எனக்கு ஒரு பெருமை.அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.இந்தப்படம் கண்டிப்பாக ஒரு பெரியவெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.எல்லாரும் தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி,வணக்கம் என்றார்.
நடிகர் சாம்ஸ் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.இந்தவிழாவில் கலந்துகொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.முதல்முறையாக இப்படியான வித்தியாசமான புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.இந்தப் புதியகான்செப்ட்டில் நிகழ்ச்சியை அமைத்த குழுவுக்கு என் பாராட்டுகள். ஒருநடிகராக நான் அரசியல் கலப்பில்லாமல் இருக்கவேண்டும் என்று நினைப்பவன்.ஆனால் இந்தப்படத்தின் “கட்சி” எனக்கு மிகவும் பிடித்தது.அதனால்தான் சிரிப்போடு இதில் சேர்ந்திருக்கிறேன்.இது முழுக்க முழுக்க பொழுதுபோக்குக்காக செய்யப்பட்ட ஒரு விசயம். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன்ரவி சார் மிகுந்த உழைப்பாளி.ஒரு நல்லதயாரிப்பாளராக இருக்க பல திறன்கள் தேவைப்படுகிறது.அந்த அனைத்தும் அவரிடம் இருக்கிறது என்று நம்புகிறேன்.இந்தப்படம் அவருக்கு பெரியவெற்றி தரும்.தம்பிராமையா சார் எப்போதும் அனைவரையும் சேர்த்து வளர்க்கும் நல்லஉள்ளம் கொண்டவர்.அவருடன் வேலைசெய்வது எனக்கு எப்போதும் ஒரு நல்லஅனுபவம்.அவரிடம் இருந்து நிறைய விசயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது.
உமாபதி ஒரு மல்டி-டேலண்ட் கலைஞர். நடிப்பு, நடனம், மார்ஷியல் ஆர்ட்ஸ், இயக்கம் எனப்பல திறமைகள் உள்ளவர்.இந்தப்படத்தில் அவருடைய இயக்கத்தில் நான் நடித்தது மகிழ்ச்சி.அவருக்கு இந்தப்படம் பெரியவெற்றி தரும் என்று நம்புகிறேன்.நட்டிசார் இந்தப்படத்தில் அசத்தலான நடிப்பைக் காட்டியுள்ளார்.அவருடைய வேறுபட்ட நடிப்பு எனக்கு மிகவும் பிடித்தது.இந்தப்படம் அவருக்கு ஒரு புதியஅடையாளமாக இருக்கும்.எம்.எஸ்.பாஸ்கர் சார் மற்றும் மற்ற கலைஞர்களுடன் இணைந்து நடித்தது சந்தோசம்.எனக்குக் கொடுத்த இந்த சிறியகதாபாத்திரமும் மிகவும் பிடித்தது.இந்தப்படம் அனைத்துத்தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்குப் படம்.நல்லபடம் வந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.அதேபோல் இந்தப்படமும் மக்களை மகிழ்விக்கும்.இந்தவாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.எல்லாரும் இந்தப்படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி,வணக்கம் என்றார்.
பாடலாசிரியர் மோகன்ராஜ் பேசியதாவது..,
சினிமா நிகழ்ச்சியை ஒரு மாநாடு மாதிரி நடத்தும் இந்த ஐடியா மிகவும் புதுமையானது.இந்தமாதிரி முயற்சியை எடுத்த இந்தப்படக்குழுவை நான் பாராட்டுகிறேன்.நான் ஒரு அரசியல் சார்ந்த படத்தில் பாடல் எழுதவேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அது இந்தப்படத்தின் மூலம் நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி.அரசியல் என்பது நம்ம வாழ்க்கையிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்று.நாம் தனியாக இருந்தாலும் கூட நம்ம மனசுக்குள்ளே ஒரு அரசியல் நடக்கிறது.அதுவே வாழ்க்கையின் ஒரு உண்மை என்று நான் நம்புகிறேன்.
இயக்குநருக்கு என் மனமார்ந்த நன்றி.இந்தப்படத்தில் நான் பாடல் எழுதவேண்டும் என்று அவரே விரும்பி அழைத்தார்.தம்பிராமையா சார் என்னைத் தொடர்புகொண்டு இந்தவாய்ப்பை கொடுத்தது எனக்கு மிகுந்த சந்தோசம்.அவர் என்மேல் வைத்த நம்பிக்கை எனக்கு உற்சாகம் தந்தது.இந்தப்பாடலின் சூழ்நிலை மிகவும் வித்தியாசமானது.ஆத்திகம்,நாத்திகம் கலந்துவரும் ஒரு புதுமையான கருத்தை கொண்டு அமைந்தது.முதலில் அது எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும்,அதை செய்யமுடியும் என்ற நம்பிக்கையை இந்தக்குழு எனக்குக் கொடுத்தது.நான் இந்தப்பாடலை முழுமையாகக் கேட்க மிகவும் ஆவலாக இருக்கிறேன்.நட்டி சார் – நான் உங்கள் பெரியஇரசிகன்.உங்களுடைய நடிப்பு இந்தப்படத்திலும் பெரிய வரவேற்பைப் பெறும் என்று நம்புகிறேன்.தம்பிராமையா சார் – உங்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பு இருக்கிறது.நீங்கள் கொடுத்த அன்பும் வழிகாட்டுதலும் எனக்கு மிகவும் முக்கியமானது.இந்தப்படம் பெரியவெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன்.இயக்குநர் உமாபதி இந்தப்படத்தின் மூலம் ஒரு பெரியவெற்றி இயக்குநராக உயர்வார். இந்தவாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி.எல்லாரும் இந்தப்படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி என்றார்.
தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பேசியதாவது..,
இந்தப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து நல்லவரவேற்பு கிடைத்திருக்கிறது.எங்கே சென்றாலும் இந்தப்படத்தைப் பற்றிய கேள்விகள் தொடர்ந்து கேட்கப்படுகின்றன.அதற்கு முக்கியகாரணம் இந்தடீசரின் தாக்கமே.இந்தப்படத்தை ஒரு சிவகாசி பட்டாசு பேக்கேஜ் மாதிரி சொல்லலாம்.அதுக்குள் பலவகையான “வெடிகள்” இருக்கும்போல.இந்தப்படத்திலும் பல வித்தியாசமான அம்சங்கள் இருக்கின்றன. எந்த இடத்தில் என்ன ஆச்சரியம் வரும் என்று தெரியாத அளவுக்கு அமைந்துள்ளது.நான் நடித்தபகுதி கொஞ்சம் மென்மையான ஒருபகுதி.அதனால் முழுபடத்தின் பரபரப்பை நான் முழுவதும் அனுபவிக்க முடியவில்லை.ஆனால் நான் பார்த்த அளவுக்கு இந்தப்படம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.
இந்த இடத்தில் தம்பிராமையா அவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும்.அவர் எப்போதும் வெற்றிப்படங்களைக் கொடுக்கக்கூடிய திறமைசாலி.இந்தப்படமும் அந்தவரிசையில் சேரும் என்று நம்புகிறேன்.முழுகதையை எனக்குச் சொல்லவில்லை என்றாலும்,சிலகாட்சிகள் மற்றும் குறிப்பாக நட்டிசார் கதாபாத்திரம் பற்றிக் கேட்டபோது,அது மிகவும் வலுவானதாக இருக்கும் என்று புரிந்தது.அவருடைய நடிப்பு இந்தப்படத்தில் ஒரு பெரியபலமாக இருக்கும்.
இந்தமேடை அமைப்பே படத்தின் தன்மையைக் காட்டுகிறது.அதேபோல் இந்தப்படம் ஒரு தனித்துவமான முயற்சி.இயக்குநர் உமாபதி ராமையா குறுகியகாலத்தில் இந்தப்படத்தைச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார்.அவருக்கு இந்தப்படம் ஒரு பெரியமுன்னேற்றமாக இருக்கும்.நீங்கள் எப்படி முந்தைய படங்களை வெற்றிப் படங்களாக்கினீர்களோ,அதேபோல் இந்தப்படத்தையும் வெற்றிபெறச் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.எல்லாரும் இந்தப்படத்தைப் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி,வணக்கம் என்றார்.
நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.இந்த இனியவிழாவில் கலந்துகொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.இந்தப்படத்தின் புரமோஷன் மிகவும் வித்தியாசமாக அமைந்துள்ளது.அரசியல் பின்னணியுடன் இருந்தாலும் இது முழுக்க பொழுதுபோக்கு நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.மக்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஒரு நல்லமுயற்சி இது.இயக்குநர் இந்தப்படத்தை அழகாக வடிவமைத்திருக்கிறார்.ஒரு அருமையான கதையும்,வித்தியாசமான அணுகுமுறையும் இதில் உள்ளது.
இந்தப்படத்தில் நான் நடித்தது எனக்கு ஒரு புதியஅனுபவம்.முன்னதாக சிலபடங்களில் இணைந்து நடித்த கலைஞர்களுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது.குறிப்பாக இளவரசு,தம்பிராமையா போன்ற திறமையான நடிகர்களுடன் மீண்டும் இணைந்து நடித்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது.தயாரிப்பாளர் கண்ணன்ரவி சார் அவர்களுக்கு என் நன்றி.இந்தவாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மனமார்ந்த நன்றி.இதேபோல் தம்பிராமையா மற்றும் இயக்குநர் உமாபதி அவர்களுக்கும் நன்றி.அவர்களின் ஒத்துழைப்பால் இந்த அனுபவம் இன்னும் சிறப்பானதாக இருந்தது.உமாபதி நடிப்பதில் எனக்கு முழுசுதந்திரம் தந்து என்னை மிகநன்றாகப் பார்த்துக்கொண்டார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என்று நான் நம்புகிறேன்.அதற்காக உங்கள் அனைவரின் ஆதரவு மிகவும் அவசியம்.எல்லாரும் இந்தப்படத்தை தியேட்டரில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நன்றி,வணக்கம் என்றார்.
இயக்குநர் உமாபதி ராமையா பேசியதாவது..,
முதலில் தயாரிப்பாளர் கண்ணன்ரவி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.இந்தப்படம் இவ்வளவு நன்றாக உருவாக அவரின் ஆதரவு மிகமுக்கியம்.அவர் எங்களுக்கு முழுசுதந்திரத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார்.அதேபோல் தீபக்ரவி சார் அவர்களும் எப்போதும் உற்சாகம் அளித்து ஆதரித்தார்.இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றி.இசையமைப்பாளர் தர்புகா சிவா,எடிட்டர்,ஃபைட் மாஸ்டர்,கோரியோகிராஃபர்கள் மற்றும் காஸ்ட்யூம்டிசைனர் அனைவரின் பங்களிப்பும் சிறப்பானது. அவர்களின் ஒத்துழைப்பால்தான் இந்தப்படம் சிறப்பாக உருவாகியுள்ளது.போஸ்ட்புரொடக்ஷன் டீம் மற்றும் சிஜி டீமிற்கும் என் நன்றி. நாள்-இரவு உழைத்து இந்தப்படத்தை முழுமையாக்கி வருகிறார்கள்.
இந்தப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.எம்.எஸ்.பாஸ்கர் சார், இளவரசு சார் போன்ற பெரியகலைஞர்கள் ஒரு புதியமுயற்சிக்காக எங்களை ஆதரித்தது மிகப்பெரிய விசயம்.அவர்கள் எந்தத் தயக்கமும் இல்லாமல் முழுஉற்சாகத்துடன் நடித்தார்கள்.
நட்டி சார் இந்தப்படத்தில் மிகவும் வித்தியாசமான நடிப்பைக் காட்டியுள்ளார்.பலகெட்டப்புகளில் அவர் கடுமையாக உழைத்துள்ளார். அவரது நடிப்பு இந்தப்படத்தின் முக்கியபலமாக இருக்கும்.இந்தப்படத்தில் யாரையும் குறிவைத்து எதுவும் செய்யப்படவில்லை.இது ஒரு பொழுதுபோக்கு அரசியல்படம் மட்டுமே.சினிமாவாக பார்த்தால் நீங்கள் நிச்சயம் இரசிப்பீர்கள்.எல்லோரும் வந்து சிரித்து மகிழும் வகையில் இந்தப்படம் உருவாகியுள்ளது.அதனால் அரசியல்கோணத்தில் பார்க்காமல்,ஒரு நல்லபடமாகப் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் என் நன்றி என்றார்.
தம்பி ராமையா பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த வணக்கம்.இந்த இனியநிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.இந்தமேடையில் பேசுவதற்கு காரணம் என் குடும்பமும்,எனக்குக் கிடைத்த ஆதரவும்தான்.இந்தப்படத்தின் உருவாக்கத்துக்கு முக்கியகாரணம் தயாரிப்பாளர் கண்ணன்ரவி அவர்களின் நம்பிக்கை.சினிமாவை வெறும் தொழிலாக அல்ல, ஒரு ஆர்வமாக எடுத்துக்கொண்டவர். அவரின் அனுபவமும்,பரந்த சிந்தனையும் இந்தப்படத்திற்குப் பெரியபலம்.
இந்தக்கதையை அரசியல்பின்னணியில் உருவாக்கியுள்ளோம்.அது ஒரு குடும்பஅனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது.இந்தப்படத்தில் உள்ள ஒவ்வொரு கலைஞரும் தனித்திறமையுடன் இணைந்துள்ளனர்.நட்டி சார் போன்றவர்கள் தங்கள் அர்ப்பணிப்பால் கதாபாத்திரத்தை உயர்த்தியுள்ளனர்.எம்.எஸ். பாஸ்கர் சார்,இளவரசு சார் போன்ற அனுபவமிக்க கலைஞர்கள் இந்தப்படத்திற்கு மேலும் வலுச்சேர்த்துள்ளனர்.இது ஒரு குழு முயற்சியாக உருவான படம்.எல்லோரும் சேர்ந்து உழைத்ததால்தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது.
ஒருபடத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும்,உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று.அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதைச் சொல்லவேண்டும்.அந்தப்பொறுப்புடன் இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.இயக்குநர் உமாபதி இந்தப்படத்தின் மூலம் தன்னை நிரூபித்துள்ளார்.அவருடைய உழைப்பு மற்றும் திறமை இந்தப்படத்தில் தெளிவாகத் தெரியும்.இந்தப்படம் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை,எனக்கு எல்லாக்கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள்.ஒருவிசயத்தைத் தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.மேலோட்டமாகக் கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வரவேண்டாம்.இந்தப்படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.
தம்பி ஆதவ்அர்ஜுனா அதைப்புரிந்துகொள்ளவேண்டும்.யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை.அதை நீங்கள் படம் பார்த்தபிறகு நிச்சயமாகப் புரிந்துகொள்வீர்கள்.மீடியா நண்பர்களிடம் ஒரு சிறியவேண்டுகோள்.பலஆண்டுகளாக எங்களுடைய இந்தமுயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.இந்தப்படத்தை முழுமையாகப் பார்த்தபிறகு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
இந்தப்படம் வெளியாகும் நாளில் நீங்கள் பார்த்து,உங்களுக்குப் பிடித்திருந்தால் பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.ஒரு தந்தையாக எனக்குக் கிடைத்த மகிழ்ச்சி – என் மகன் தனது உழைப்பால் இந்தநிலைக்கு வந்திருக்கிறான் என்பதுதான். அதை நீங்கள் உணர்ந்தால் அதுவே எனக்கு மிகப்பெரிய சந்தோசம்.இந்தப்படத்தை எல்லாரும் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம் என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ் பேசியதாவது..,
எல்லாருக்கும் என் மனமார்ந்த மாலை வணக்கம்.முதலில் தயாரிப்பாளர் கண்ணன்ரவி சார், தீபக்ரவி சார் அவர்களுக்கு நன்றி. அதேபோல் இந்தப்படத்தில் உழைத்த அனைத்து உதவிஇயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் என் நன்றி.
இயக்குநர் உமாபதி சார் பற்றிச் சொல்லவேண்டுமென்றால்,அவர் மிகவும் கடினஉழைப்பாளி மற்றும் கட்டுப்பாட்டுடன் வேலை வாங்கும் இயக்குநர்.இன்னும் சிலஆண்டுகளில் இந்தியஅளவில் பெரியஇயக்குநர்களின் பட்டியலில் அவர் இடம்பிடிப்பார் என்று நான் நம்புகிறேன்.
இந்தப்படத்தில் நான் நடித்தது ஒரு பெருமை.ஏனெனில் இரண்டு தேசியவிருது பெற்ற நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன்.தம்பிராமையா அண்ணா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் சார் – இருவரிடமிருந்தும் நான் நிறையக் கற்றுக்கொண்டேன். அதோடு இளவரசு சார்,சித்ரா மேடம்,விஜி மேடம் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களும் அருமையாக நடித்துள்ளனர்.
இயக்குநர் உமாபதி சார் ரிகர்சல் முதல் ஷூட்டிங்வரை ஒவ்வொரு விசயத்தையும் மிகநுணுக்கமாகக் கவனிப்பார்.அவர் வேலை செய்யும்விதம் மிகவும் வித்தியாசமானது.அவருடன் வேலை செய்தது ஒரு நல்லஅனுபவம்.இந்தப்படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது.அரசியலை ஒரு புதியகோணத்தில் சொல்லும் முயற்சி இது.
எம்.எஸ்.பாஸ்கர் சார் போன்ற பெரியகலைஞர்கள் இந்தப்படத்தில் இருக்கிறதே ஒரு பெரியபலம்.அவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு ஆசீர்வாதம்.இந்தப்படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை.இது முழுக்கமுழுக்க ஒரு பொழுதுபோக்கு படம்.முதல்ஃப்ரேமிலிருந்து கடைசிஃப்ரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.அதனால் தயவுசெய்து வேறுகோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாகப் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.எல்லாருக்கும் நன்றி.வணக்கம்.
இவ்வாறு அவர் பேசினார்.











