பொதுத்துறையில் பணியாற்றும் கதாநாயகன் விஜய்யின் சொந்த வாழ்க்கையில் மகன் காணாமல் போகிறார் மனைவி பிரிகிறார் என்பது உள்ளிட்ட பல சிக்கல்கள். அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? காணாமல் போன மகன் கிடைத்தாரா? என்கிற கேள்விகளுக்கான விடை தாம் தி கோட். அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்
விஜய்யின் 68 ஆவது படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 21,2023 அன்று வெளியானது. அப்போது வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…… தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகியோர் தங்களின் 25 ஆவது திரைப்படத்திற்காக தளபதி விஜய்யுடன் இணைந்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில்