கன்னடம், தமிழ், உள்பட ஐந்து மொழிகளில் வெளியான படம் கே.ஜி.எஃப். கோலார் தங்கச் சுரங்கத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் யஷ் நாயனாக நடித்திருந்தார். இதில் யஷ் உடன் ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி கன்னடத் திரையுலகிலேலேயே அதிக
2014 ஆம் ஆண்டு வெளியான திருடன் போலிஸ், 2017 இல் வெளியான உள்குத்து உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் கார்த்திக்ராஜு. இவர் கொரோனா ஊரடங்குக் காலத்தில் சத்தமின்றி ஒரு முழுநீளத் திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளாராம். கதாநாயகியை மையப்படுத்திய ஒரு பேய்க்கதை என்பதால் மிகக்குறைந்த ஊழியர்களுடன் முப்பது நாட்களுக்குள் மொத்தப்படப்பிடிப்பையும் நடத்தியுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்ததது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல் காரணமாக வடமாநிலங்களில் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. அதனால், ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் படப்பிடிப்புத் தளத்தில்
பின்னணிப் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியா நடிப்பில் சில படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அப்படங்களில் சுந்தர்.சியின் அரண்மனை 3 படம் வேகமாக வளர்ந்திருக்கிறது. மற்ற படங்கள் தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒரு அரசியல் வாரிசு நடிகர் தொடர்பாக ஆண்ட்ரியா வெளீயிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவருக்குப் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
கென்னடி கிளப் படத்துக்குப் பிறகு, சுசீந்திரன் இயக்கும் படத்தில் ஜெய் நாயகனாக நடிக்கிறார். அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் பாரதிராஜா நடிக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யவுள்ளார் என்று செய்திகள் வந்தன. இப்படம் கொரோனா ஊரடங்கு முடிந்தவுடன் திடங்கும் என்றும் செய்திகள் வந்தன. ஆனால், யாரும் நம்பமுடியாவண்ணம் கொரோனா ஊரடங்குக் காலத்திலேயே மொத்தப்
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை மீன்உம் தொடங்கப் பல மாதங்கள் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது. அதனால், அமேசான் நிறுவனத்துக்காக புதிதாக இணையத் தொடர் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கிறார். காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் எனப்பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் கதைகளை அடிப்படையாகக் கொண்டு இக்குறும்படங்கள் உருவாக்கப்படுகின்றன என்று
கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 70 நாட்களுக்குப் பிறகு சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக படப்பிடிப்புத் தளத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொலிகள் வெளியாகியுள்ளன. இதனிடையே சின்னத்திரை சங்கத்தின் செயலாளரான குஷ்புவின் பேச்சு ஒன்று வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. அந்தப் பேச்சில்,
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 19 ஆம் தேதி முதல் திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் இரத்து செய்யப்பட்டிருந்தன. இதனால் திரைப்படத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். மே 11 முதல் படப்பிடிப்புகளுக்குப் பின்பான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதேபோல் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளிக்கக்கோரி அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
உலகமெங்கும் கொரோனா வைரஸ் அச்சம் தொற்றிக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 114 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் தமிழக அரசு இரண்டுமே கல்வி நிறுவனங்கள்,வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழ்த் திரையுலகில் உருவாகி வரும் படங்களின் படப்பிடிப்புகளும்
மிக்க நன்றி,தளபதி என்றழைக்கப்படும் நடிகர் திரு. விஜை அவர்களே! உங்களின் தளபதி 64 படத்திர் படப்பிடிப்பு எமது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது. பொதுவாகவே எமது பள்ளியில் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒருமித்த





















