அதிகாலை நான்கு மணிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் கண் விழிக்கும் நாயகன் ரங்கசாமியின் (நடிகர் ஆண்டனி) நிழல் போல, அல்ல அல்ல உடல் போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்படக் கருவி பயணிக்கிறது. கண்களுக்கு விருந்து என்று வியக்கும் மலைகளின் உடல் வழியே நரம்புகள் போல அமைந்த ஒற்றையடிப்












