சினிமா செய்திகள் நடிகர்

சூர்யா செல்வராகவன் படத்தில் திடீர் மாற்றம்

சூர்யா நடிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத்சிங், சாய் பல்லவி என இரண்டு நாயகிகள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

ஜெகபதி பாபு, இளவரசு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.கேங்ஸ்டர் படமாக உருவாகிவரும் இப்படத்துக்கு, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இருவரும் தயாரிக்கின்றனர். வருகிற தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் படத்தொகுப்பாளராக பிரசன்னா ஜி.கே. ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், தற்போது திடீரென அவர் மாற்றப்பட்டுள்ளார்.

பிரசன்னாவுக்குப் பதிலாக பிரவீன் கே.எல். படத்தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு சூர்யா செல்வராகவன் தயாரிப்பாளர் பிரபு ஆகியோருக்கு நன்றி சொல்லியிருக்கிறார் பிரவீன் கே எல்.

Related Posts