சினிமா செய்திகள்

சூர்யா 42 பெயர் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஆகஸ்ட் 21,2022 இல் தொடங்கப்பட்ட சூர்யாவின் 42 ஆவது படம்,வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கிறது. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 25 ஆவது படமான இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கிக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான யூ வி கிரியேஷன்ஸ் வம்சிபிரமோத் உடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார் ஞானவேல்ராஜா.

இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இந்தி நடிகை திஷாபதானி நடிக்கிறார். யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.

வரலாற்றுக்காலம் மற்றும் தற்காலம் ஆகியனவற்றோடு இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.

பத்து மொழிகளில் தயாராகிறது என்று சொல்லப்பட்டிருக்கும் இப்படத்தின் பெயர் என்ன என்பதை ஏப்ரல் 16,2023 அன்று காலை 9 மணி 5 நிமிடத்தில் அறிவிப்பதாக ஏப்ரல் 11 அன்று அறிவிப்பு வெளியிட்டார்கள்.

அதன்படி, இன்று காலை வெளியான அறிவிப்பில், இப்படத்தின் பெயர் கங்குவா என்றும் இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பை சூர்யா இரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடிவருகிறார்கள்.

பின்குறிப்பு – இந்தப்படத்துக்கு கங்குவா என்று பெயர் வைக்கப்போகிறார்கள் என்கிற செய்தியை நம் சினிமாவலை இணையதளத்தில் ஏப்ரல் 13 அன்றே வெளியிட்டிருந்தோம். நம் தளத்தில் செய்தி வெளியான பின்பு அது இணையமெங்கும் பரவியதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts