செய்திக் குறிப்புகள்

சொந்தச் சாதனையை முறியடித்த ஷாருக்கான்

பிரபல கதைசொல்லியும் இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில்,அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் ஆகியோர் எழுத்தில் உருவாகியுள்ள படம் டங்கி.

ஷாருக்கான், டாப்ஸி பன்னு, நடிகர்கள் போமன் இரானி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் போன்ற திறமையான நடிகர்களைக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளது.

ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் இணைந்து வழங்கும் டங்கி படத்தை ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் தயாரித்துள்ளனர்.

இப்படம் 21 டிசம்பர் 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

ஷாருக்கானின் பிறந்தநாளில் டங்கி டிராப்-1 (Dunki Drop 1) வெளியானது. இதைத் தொடர்ந்து அர்ஜித் சிங்கின் இனிமையான குரலில் லுட் புட் கயா என்ற தலைப்பில் டங்கி டிராப் 2 வெளியானது.

டிராப்-3-ல் சோனு நிகாமின் ஆன்மாவைத் தூண்டும் பாடலான நிக்லே தி கபி ஹம் கர் சே, ஒரு கூர்மையான மெல்லிசையுடன் அமைந்த பாடல் இதயங்களைக் கவர்ந்தது.

தற்போது டிரெய்லர் டங்கி டிராப் 4 என்று வெளியாகியுள்ளது.டங்கி டிராப் 4 (டிரெய்லர்) வெளியானதிலிருந்தே பார்வையாளர்களின் அன்பைப் பெற்று, எட்டுதிக்கும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது.

இது, நட்பு மற்றும் அன்பின் அடுக்குகளை அழகாக விரித்து, டங்கி படத்தின் பாதையில் பார்வையாளர்களை பரபரப்பான பயணத்துக்கு அழைத்துச் செல்கிறது. நண்பர்கள் அவர்கள் விரும்பிய இலக்கை அடைய அவர்கள் செல்லும் பாதையைக் குறிக்கிறது. பழைய கேரக்டரில் ஷாருக்கான் தோன்றும் காட்சியுடன் டிரெய்லர் முடிவடைகிறது.

இந்த டிரெய்லர் மனதின் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் படைப்பாக்கத்தின் திரை அழகை எடுத்துக்காட்டுகிறது. போமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர், மற்றும் ஷாருக்கானுடன் இணைந்து நடித்த, இன்னும் பல திறமையான நடிகர்களால் சித்தரிக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், பார்வையாளர்களை ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரிக்கு இந்த வீடியோ அழைத்துச் செல்கிறது.

நான்கு நண்பர்களின் இதயத்தைத் தூண்டும் கதையையும் வெளிநாட்டுக்குச் செல்லும் கனவில் அவர்களின் தேடலையும் நமக்குச் சொல்கிறது.நிஜ வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட டங்கி திரைப்படம் அன்பு மற்றும் நட்பின் பெருமையை விவரிக்கும் காவியமாகும், இது பெருமளவில் வேறுபட்ட மனிர்தர்களின் கதைகளை ஒன்றாகப் பின்னுகிறது, அந்தக் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் சவால்களை அதன் நகைச்சுவைப் பக்கத்தையும், அதற்கான இதயம் அதிரும் பதில்களையும் சேர்த்து வழங்குகிறது.

24 மணிநேரத்தில் 103 மில்லியன் பார்வைகளைப் பெற்ற ஒரே இந்தித் திரைப்படமாக இந்தியத் திரையுலகில் சாதனை படைத்துள்ளது “டங்கி” டிராப் 4 டிரெய்லர்.தனது சொந்தச் சாதனைகளை முறியடிப்பதில் வல்லவராக அறியப்படும் ஷாருக், சமீபத்தில் மெகா ஹிட்டான ஜவானிலும் இதையே செய்திருந்தார், தற்போது டங்கி மூலம் மீண்டுமொரு முறை அந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Related Posts