October 30, 2025
சினிமா செய்திகள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைந்தார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு திரையுலகம் கண்ணீர்

ஆகஸ்ட் 5 ஆம் தேதி பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தொடக்கத்தில் நல்மாக இருப்பதாக காணொலி வழியாகக் கூறியிருந்தார்.

ஆனால், ஆகஸ்ட் 14 ஆம் தேதி அவருடைய உடல்நிலை மோசமடைந்தது. பின்பு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பினார். இதனிடையே நேற்று (செப்டம்பர் 24) எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

உடனடியாக நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவந்தார்.

இன்று காலையிலிருந்தே மருத்துவமனை வளாகம் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. எஸ்.பி.பியின் குடும்பத்தினர் உட்பட பலர் மருத்துவமனைக்கு வந்து அவரைப் பார்த்தனர்.

இந்நிலையில் மதியம் 1.04 மணிக்கு அவர் உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அவருக்கு வயது 74.மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவரது மகன் எஸ்.பி.பி.சரண் இந்தத் தகவலை உறுதிபடுத்தினார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவியின் பெயர் சாவித்திரி. பல்லவி என்ற மகளும், எஸ்.பி.சரண் என்ற மகனும் இருக்கிறார்கள். இருவருக்குமே திருமணமாகிவிட்டது.

அவர் மறைவால் திரையுலகினர் கடும் வேதனையில் ஆழ்ந்து கண்ணீர் சிந்துகின்றனர்.

Related Posts