சினிமா செய்திகள்

சூரரைப் போற்று படத்தால் சூர்யாவுக்கு முப்பது கோடி இலாபம் – ஆச்சரிய கணக்கு

சூர்யா தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று படம் நேரடியாக இணையதளத்தில் வெளியாகும் என்கிற அறிவிப்பு நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 22 ) அன்று வெளியானது.

அப்போதிருந்து திரையுலகில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. சூர்யாவின் இந்த முடிவுக்கு விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடுவதால் எந்தச் சிக்கலும் இல்லாமல் சுமார் முப்பது கோடி இலாபம் சம்பாதித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதுபற்றி திரையுலகில் உலவும் கணக்கு…..

சூரரைப்போற்று படத்தை தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் இணையதளத்தில் வெளீயிடுவதற்கான விலை சுமார் 35 கோடி என்கிறார்கள்.

இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை சுமார் 18 கோடிக்கு ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருந்ததென்கிறார்கள்.

வெளிநாட்டு உரிமை சுமார் 12 கோடி, பாடல் உரிமை சுமார் 2 கோடி, இந்தி மொழிமாற்று உரிமை சுமார் 12 கோடி என்று சொல்லப்படுகிறது.

இதன்படி மொத்தம் 79 கோடி என்றும், நேரடி இணைய ஒளிபரப்பு எனும் முடிவெடுக்குமுன்பு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டதாம்.

அதனால் அவ்விரண்டிலும் சில கோடிகள் குறைய வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.இரண்டிலும் சேர்த்து ஒன்பது கோடி குறைகிறது என்றாலும் மொத்த வியாபாரம் எழுபது கோடி எனலாம்.

இப்படத்துக்கான மொத்த செலவு சூர்யா சம்பளம் இல்லாமல் சுமார் 19 கோடியாம்.சூர்யா சம்பளம் 20 கோடி என்று வைத்துக் கொண்டால் மொத்தம் 39 கோடி ஆகிறது.

இந்தக்கணக்கின்படி இந்தப்படத்தின் மூலம் சூர்யா முப்பது கோடி இலாபம் சம்பாதித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இவ்வளவு இலாபம் கிடைக்கிறது என்பதாலேயே எதிர்ப்புகளைப் பற்றிக் கவலைப்படாமல் இணையதளத்தில் வெளியிட சூர்யா ஒப்புக்கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts