December 19, 2025
சினிமா செய்திகள்

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் வேண்டாம் – இயக்குநர் ஷங்கர் அதிரடி

ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர், கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தை இயக்கவிருக்கிறார். அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

தற்போது ‘2.0’ இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இயக்குநர் ஷங்கர், அதனைத் தொடர்ந்து ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கவுள்ளார்.

இப்போது அப்படத்துக்கான தொழில்நுட்பக்கலைஞர்களைத் தேர்வு செய்துகொண்டிருக்கிறார்களாம்.

‘இந்தியன் 2’படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்படவுள்ளார். இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

அப்போது இந்தியன் 2 படத்தில் பணிபுரிய மூன்றரை கோடி சம்பளம் கேட்டிருக்கிறார் அனிருத். இதைக்கேட்டு இயக்குநர் ஷங்கர் அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்.

மற்ற படங்களுக்கு இரண்டரை கோடி சம்பளம் வாங்கும் அனிருத், இந்தப்படத்துக்கு மூன்றரை கோடி கேட்பதா? அப்படியானால் அவர் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம் ஷங்கர்.

விசயமறிந்த அனிருத் சம்பளத்தைக் குறைத்துக் கொள்வதாகச் சொன்னாராம். அதன்பின் இந்தியன் 2 படத்தில் அனிருத் பணிபுரிய சம்மதம் சொன்னாராம் ஷங்கர்.

Related Posts