செய்திக் குறிப்புகள்

பரபரப்புக்குப் பஞ்சமில்லாத படம் றெக்கை முளைத்தேன் – எஸ்.ஆர்.பிரபாகரன் உறுதி

சுந்தரபாண்டியன்,இது கதிர்வேலன் காதல்,சத்ரியன்,கொம்பு வெச்ச சிங்கம்டா ஆகிய படங்கள் மற்றும் ‘செங்களம்’ இணையத் தொடர் ஆகியனவற்றை இயக்கிய எஸ் ஆர் பிரபாகரன் இப்போது இயக்கியிருக்கும் படம் ‘றெக்கை முளைத்தேன்’.

சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் கிராமத்து நட்பு,இது கதிர்வேலன் காதல் படத்தில் நகைச்சுவை மற்றும் காதல்,சத்ரியன் படத்தில் ஆக்ஷன்,கொம்பு வெச்ச சிங்கம்டா படத்தில் கிராமத்து வீரம், ‘செங்களம்’ இணையத் தொடரில் அரசியல் ஆழம் எனப் பல்வேறு வகைப் படைப்புகள் செய்த இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், ‘றெக்கை முளைத்தேன்’ படத்தின் மூலம் இன்னுமொரு புதிய களத்தில் புகுந்துள்ளார்.

இது வரை அவர் செய்த படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ஜானரை சேர்ந்த ‘றெக்கை முளைத்தேன்’ படத்தை எழுதி, இயக்கி இருப்பதோடு தனது ஸ்டோன் எலிபெண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் எஸ்.ஆர்.பிரபாகரன் தயாரித்தும் உள்ளார்.

இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன், பிரபா, குருதேவ், நித்திஷா, மெர்லின், ஜெய்பிரகாஷ், ‘ஆடுகளம்’ நரேன்,கஜராஜ், மீராகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீ ரஞ்சனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு தரண்குமார் பின்னணி இசை அமைக்க, கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிஜு வி. டான்போஸ்கோ கையாளுகிறார்.பாடலுக்கான இசையை தீசன் வழங்கி உள்ளார்.கலை இயக்கம்: பிரேம்,
புகைப்படங்கள்: சி.எச். பாலு, ஆடை வடிவமைப்பாளர்: திவ்யா பிரபு

இப்படம் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில்’றெக்கை முளைத்தேன்’ படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

அவர் கூறியதாவது…

இத்தகைய படங்களைத்தான் இவர் எடுப்பார் என்ற சுழலில் சிக்காமல் ஒவ்வொரு படத்திலும் புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற எனது இலட்சியத்தின் வெளிப்பாடுதான் ‘றெக்கை முளைத்தேன்’.கல்லூரியில் சேர்ந்த உடன் புதியசிறகுகள் கிடைத்ததாக உணரும் மாணவர்கள் ஒரு புறம்,அதிரவைக்கும் குற்றத்தை விசாரிக்கும் காவலதிகாரியாக தன்யா ரவிச்சந்திரன் மறுபுறம் என்று தொடக்கம் முதல் இறுதிவரை பரபரப்புக்குப் பஞ்சம் வைக்காத வகையில் இப்படம் இருக்கும் என்றார்.

Related Posts