சினிமா செய்திகள்

ரஜினியை வம்புக்கிழுத்த விஸ்வாசம் முன்னோட்டம் – ரசிகர்கள் மோதல்

2019 சனவரி 10 ஆம் தேதி ரஜினி நடித்துள்ள பேட்ட மற்றும் அஜீத் நடித்துள்ள விஸ்வாசம் ஆகிய படங்கள் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இரண்டு நடிகர்களுக்கும் பெரிய ரசிகர்படை இருப்பதால் போட்டி அதிகமாக இருக்கிறது.

அது சமூகவலைதளங்களில் மிகவும் அதிகமாக எதிரொலிக்கிறது.

இந்நிலையில் பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் முன்னோட்டங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் போட்டிக்குத் தீனி போட்டிருக்கின்றன.

பேட்ட பட முன்னோட்டத்தில் ரஜினி, ஏய் எவனுக்காவது பொண்டாட்டி குழந்தைங்க மீது செண்டிமெண்ட் இருந்தா அப்படியே ஓடிப்போயிடு கொலை காண்டுல இருக்கேன்
என்று பேசியிருந்தார்.

அடுத்து வந்த விஸ்வாசம் பட முன்னோட்டத்தில், பேரு தூக்குதுரை ஊரு தேனி பொண்டாட்டி பேரு நிரஞ்சனா, பொண்ணு பேரு ஸ்வேதா ஒத்தைக்கு ஒத்த வாடா என்று அஜீத் பேசியிருந்தார்.

உடனே இது ரஜினிக்கு அஜீத் விடுக்கும் சவால் என்று அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியாகப் பகிர்ந்துவருகின்றனர். ரஜினி ரசிகர்கள் அதற்குப் பதிலடி கொடுத்துவருகின்றனர்.

இது தொடர்பாக நிறைய மீம்ஸ் எனப்படும் கேலிப்படங்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதனால் சமூகவலைதளங்கள் பரபரப்பாக இருக்கின்றன.

Related Posts