ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினியின் வேடம் இதுதான்

பேட்ட படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கும் இந்தப்படத்துக்கு சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்யவிருப்பதாகவும் அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப்படத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் வேடம் பற்றியும் தகவலகள் கசிந்திருக்கின்றன்.
இந்தப்படத்தில் பல்லாண்டுகளுக்குப் பிறகு காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம்.
காவல்துறை அதிகாரி என்பதால், அதிலும் ரஜினி நடிக்கிறார் என்பதால் காட்சிகள் மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
துப்பாக்கி படத்தில் விஜய்யை காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க வைத்திருந்தார் ஏ.ஆர்.முருகதாஸ். அது விஜய்க்குப் பெரும் வரவேற்பாகவும் பலமாகவும் அமைந்திருந்தது.
அதுபோல் இந்தப்படம் ரஜினிக்குப் பெரும் பலமாக அமையும் என்கிறார்கள்.