September 24, 2026
சினிமா செய்திகள்

கவிஞர் குட்டிரேவதி இயக்குநரானார்

கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர், சித்த மருத்துவர் எனப் பன்முகங்கள் கொண்டவர் குட்டிரேவதி,ஏ.ஆர்.ரகுமான் இசையில், ‘மரியான்’ படத்துக்காக ‘நெஞ்சே எழு’ மற்றும் ‘எங்க போன ராசா’ பாடல்களை எழுதிப் பாடலாசிரியராக அறிமுகமானவர் குட்டி ரேவதி.‘மாயா’ மற்றும் ‘8 தோட்டாக்கள்’ படங்களிலும் பாடல்கள் எழுதியுள்ளார்.

குட்டிரேவதி இப்போது ஒரு படத்தை இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, செவன்த் சேனல், மெட்ராஸ் டாக்கீஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பு வகித்தவரும் திரையுலகில் நீண்ட அனுபவங்களை உடையவருமான மாலாமணியன் தயாரிக்கிறார்.

பா.இரஞ்சித் இயக்கிய ‘மெட்ராஸ்’ படத்தில், ஜானி கதாபாத்திரத்தில் நடித்த ஹரி கிருஷ்ணன் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கிறார் என்றும் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

Related Posts