September 16, 2026
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் விருந்தில் நடந்த சம்பவம் – சுபாஸ்கரன் மணிரத்னம் வேதனை

பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்காக நவம்பர் 5 ஆம் தேதியன்று ஒரு மாபெரும் விருந்து வைத்தார் லைகா நிறுவனர் சுபாஸ்கரன்.

நட்சத்திர விடுதியொன்றில் நடந்த அவ்விருந்தில், பொன்னியின்செல்வன் படக்குழுவினர் மற்றும் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள்.

மதுவிருந்து என்றாலே பல சிக்கல்கள் உருவாகும்.

அதேபோல் அவ்விருந்திலும் நடந்துவிட்டதாம்.

மதுபோதையில் ஒரு பெரியவர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தைச் சார்ந்த ஓர் இளம்பெண்ணிடம் பொதுஇடத்திலேயே மிகத் தவறாக நடந்துகொண்டாராம்.

இதனால் அப்பெண்ணின் நண்பர்கள் உள்ளிட்ட சிலர் அப்பெரியவரைக் கடுமையாகத் தாக்கிவிட்டார்களாம்.அதோடு நில்லாமல் அவர் மேல் காவல்துறையில் புகார் கொடுக்கவேண்டும் என்று புறப்பட்டார்களாம்.

விசயமறிந்த முக்கியஸ்தர்கள் தலையிட்டு,காவல்துறையில் புகார் என்றெல்லாம் போனால் மணிரத்னம் சுபாஸ்கரன் உள்ளிட்ட எல்லோருக்கும் சிக்கல் வரும். மேலும் அப்பெண்ணும் போதையில் இருப்பதால் புகார் எடுபடாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது எனவே அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார்களாம்.

தாக்குதலுக்கான பெரியவரும் முக்கியப்புள்ளியாம்.

இதனால் சம்பந்தப்பட்டவர்கள் இவ்விசயத்தை வெளியே வராமல் அமுக்கிவிட்டதாகச் சொல்கிறார்கள்.

பெரும் செலவில் விருந்து கொடுத்த சுபாஸ்கரன் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இந்நிகழ்வால் கடும் வருத்தத்துக்கு ஆளாகிவிட்டனர் என்றும் சொல்கிறார்கள்.

மது வீட்டுக்கும் நாட்டுக்கும் மட்டுமன்று விருந்துக்கும் கேடு.

Related Posts