வேறு பெயரில் வெளியாகவிருக்கும் நிமிர்ந்துநில்
2014 மார்ச் 8 ஆம் தேதி வெளியான படம் நிமிர்ந்துநில்.சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம்ரவி அமலாபால் சரத்குமார் உட்பட பலர் நடித்த அந்தப்படம் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது.
ஜந்தாபாய்கப்பிராஜு என்ற பெயரில் தெலுங்கில் வெளியான அந்தப்படத்தில் ஜெயம்ரவிக்குப் பதிலாக நானி நடித்திருந்தார். அமலாபால் சரத்குமார் ஆகியோர் அந்தப்படத்திலும் நடித்திருந்தார்கள்.
இப்போது அந்தப்படம் மீண்டும் தமிழுக்கு வருகிறது.இப்போது அந்தப்படத்துக்கு வேலன் எட்டுத்திக்கும் என்று பெயரிட்டுள்ளனர்.
தமிழிலிருந்து தெலுங்குக்குப் போய் மீண்டும் வேறு பெயருடன் தமிழுக்கே வருகிற அந்தப்படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்கும் என்பதை அறிய அனைவரும் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.











