February 10, 2026
சினிமா செய்திகள்

மிஷ்கின் அழைப்பு நயன்தாரா நிராகரிப்பு

துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகிய பின்பு சிம்புவை வைத்து ஒரு படம் எடுக்கும் முயற்சியில் இருக்கிறார் மிஷ்கின்.

அதோடு அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து அஞ்சாதே 2 படத்தை எடுக்கவும் திட்டமிட்டிருக்கிறார்.

இவை மட்டுமின்றி இன்னொரு படத்திற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறாராம்.

கதாநாயகியை மையப்படுத்திய அந்தக்கதையில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும என நினைத்து அவரைச் சந்தித்து கதை சொன்னாராம்.

கதையைக் கேட்டுவிட்டு சில நாட்களுக்குப் பின், இந்தக் கதை எனக்குச் சரியாக இருக்காது என்று சொல்லி நிராகரித்துவிட்டாராம்.

இதனால் கடுப்பான மிஷ்கின், இந்தக் கதையில் சைக்கோ பட கதாநாயகி அதிதி அல்லது நித்யாமேனனை வைத்து இந்தப்படத்தை எடுத்து வெற்றிப் படமாக்கிக் காட்டுகிறேன் என்று சொல்லி அதற்கான முயற்சியில் தீவிரமாக இருக்கிறாராம்.

Related Posts