சினிமா செய்திகள்

8 ஆண்டுகளுக்குப் பிறகும் கெத்து காட்டும் இயக்குநர் ஆர்யா மகிழ்ச்சி

அருள்நிதி இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2011 டிசம்பர் 16 ஆம் தேதி வெளியான படம் மெளனகுரு.

நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்ற அப்படத்தை இயக்கியவர் சாந்தகுமார்.

மௌன குரு’ படத்துக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கிருக்கும் படம் மகாமுனி.

கிரைம் த்ரில்லர் வகையில் உருவாகியுள்ளது.

ஆர்யா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். இவர்களுடன் ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.

கடந்த வருடம் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்தது.தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அண்மையில் இப்படத்தின் முதல்பார்வை வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதோடு படத்தின். வியாபாரமும் வேகம் பிடித்துவிட்டதாம்.

இப்படத்தின் தமிழக திரையரங்குகளில் வெளியிடும் உரிமை மட்டும் சுமார் ஏழு கோடிக்கு விற்றிருக்கிறதாம்.

எட்டாண்டுகளுக்குப் பின் வந்தாலும் இயக்குநர் சாந்தகுமாருக்கு ஒரு வரவேற்பு இருப்பதையும் அவருடன் ஆர்யா இணைந்தது கூடுதல் பலம் என்பதையும் இந்த வியாபாரம் உணர்த்துகிறது என்கிறார்கள்.

இதனால் படத்தின் நாயகன் ஆர்யா பெருமகிழ்ச்சி அடைந்துள்ளாராம்.

Related Posts