October 29, 2025
சினிமா செய்திகள்

உச்சம் தொட்ட சந்தானத்தின் குலு குலு பட வியாபாரம் – படக்குழு பெருமகிழ்ச்சி

மேயாதமான், ஆடை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் இரத்னகுமார் தற்போது இயக்கியிருக்கும் படம் ‘குலு குலு’.

சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தில் அதுல்யா சந்திரா, நமிதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், சாய் தீனா, ‘லொள்ளு சபா’ மாறன், சேசு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

ஏப்ரல் 19,2022 அன்று குலுகுலு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக நடிகர் சந்தானம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இப்போது படம் முழுமையாகத் தயாராகிவிட்டதாம்.

இந்தப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை மற்றும் திரையரங்கு வெளீயீட்டிற்குப் பின்பான இணைய ஒளிபரப்பு உரிமை ஆகியனவற்றை சன் தொலைக்காட்சி பெற்றிருக்கிறதாம்.

இதற்காக அந்நிறுவனம் கொடுத்திருக்கும் தொகை பதினொன்றரை கோடி என்று சொல்லப்படுகிறது.

சந்தானம் நடித்திருக்கும் படம் வெளியீட்டுக்கு முன்பே இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையான விசயமறிந்தோர் வியப்பின் உச்சத்தில் உள்ளனர்.

இதற்குப் பின் தமிழ்நாடு திரையரங்கு உரிமை மற்றும் பல உரிமைகள் விற்பனையில் கிடைக்கவிருக்கும் தொகைகளைத் தோராயமாகப் பார்த்தால் இப்படத்தின் மொத்த வியாபாரம் இருபது கோடிவரை போகும் என்பதால் படக்குழுவினர் பெருமகிழ்ச்சியில் உள்ளனராம்.

Related Posts