சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் தாமதம் கார்த்தி எடுத்த அதிரடி முடிவு

மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு, 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் இலங்கையில் சில நாட்கள் நடந்தது.

அவற்றைத் தொடர்ந்து ஜெய்ப்பூர் உள்ளிட்ட வடமாநிலங்களில்  மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால் கொரோனா காரணமாக படப்பிடிப்பு இரத்தானது.

ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த சில நாட்களில் அப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.அப்படியில்லாமல் அப்படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க மேலும் தாமதமாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதனால் அப்படத்தில் நடிக்கும் கார்த்தி வேறு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துகிறாராம்.

இயக்குநர் முத்தையாவை அழைத்த கார்த்தி, ஆறு மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்துவிடலாமென்றால் உடனே படம் தொடங்கலாம் என்று சொல்லியிருக்கிறாராம். 

அதனால் முத்தையா, மிக வேகமாகத் தயாராகிறார் என்று சொல்கிறார்கள்.

ஏற்கெனவே முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்திருக்கிறார் கார்த்தி. 2015 ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியான அந்தப்படம் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Posts