February 2, 2026
சினிமா செய்திகள்

கமல் ரஜினி இணையும் பட இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் – விவரங்கள்

பல்லாண்டுகளுக்குப் பிறகு கமலும் ரஜினியும் இணைந்து நடிக்கிறார்கள் என்கிற அறிவிப்பு வந்ததும் இரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.

ஆனால்,அவர்கள் இருவரும் இணையும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று சொல்லப்பட்டது.இதுகுறித்து அண்மையில் லோகேஷ் கனகராஜே வெளிப்படையாகப் பேசியிருந்தார்.

அதுபற்றி அவர் கூறியதாவது…

ஒன்றரை மாதங்கள் இருவருக்காகவும் சின்சியராக கதை எழுதினேன்.‌அவர்கள் இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து கதையையும் விவரித்தேன்.கதையைக் கேட்டு இருவரும் வியப்படைந்தார்கள்.ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்சன் படங்களில்தான் நடித்துக் கொண்டே இருந்தனர்.தற்போது நடித்து வரும் ‘ஜெயிலர் 2 ‘ மற்றும் அன்பறிவ் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் படம் வரை ஹெவியான ஆக்சன் படங்கள்தான்.அதனால் இருவரும் ஆக்ஷன் இல்லாமல் மென்மையான திரைக்கதையாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினர்.‌இதை அவர்கள் இருவரும் என்னிடமும் தெரிவித்தனர். அத்தகைய ஸ்டைலில் எனக்கு படத்தை இயக்கத் தெரியாது.இதை அவர்களிடம் தெரிவித்துவிட்டு விலகிவிட்டேன்.‌

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், இப்போது கமல் ரஜினி ஆகியோர் இணையும் படத்தை இயக்கும் இயக்குநர் முடிவாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

இப்போது,ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் நெல்சன்தான் கமல்,ரஜினி ஆகியோர் இணையும் படத்தை இயக்கவிருக்கிறாராம்.

அவர் சொன்ன கதை இருவருக்கும் பிடித்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.

அதனால், இருவரும் சம்மதம் சொல்லிவிட்டார்களாம்.

இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராஜீவ்மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம்.

இருவரும் இணையும் படத்தின் அறிவிப்பையே பெரிதாக வெளியிட வேண்டும் என்பதற்காக, ஒரு காணொலி எடுக்கவிருக்கிறார்கள்.அதன் படப்பிடிப்பு பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னையில் நடக்கவிருக்கிறதாம்.

அதற்கான வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன என்கிறார்கள்.

இப்படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருக்கும் நெல்சன், ஜெயிலர் 2 படத்தை முடித்துவிட்டு ஒரு தெலுங்குப் படத்தை இயக்கவிருக்கிறார்.அப்படம் முடிந்ததும் இந்தப்படத்தை இயக்குவார் என்று சொல்லப்படுகிறது.

பெரும்பாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் இது நடக்கும் என்றாலும், இப்போதிருந்தே அப்படத்தின் வேலைகள் தொடங்கவிருக்கின்றன.

ஏன் இவ்வளவு முன் கூட்டியே வேலைகள் தொடங்குகின்றன?

இந்தப்படத்துக்கு இரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்புக்கு எவ்வித பங்கமும் நேர்ந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தில்,
ஒவ்வொரு கட்டமாக நகர்த்தி படப்பிடிப்புக்குச் செல்லும்போது மிக மிக நேர்த்தியான வடிவத்துக்குக் கொண்டு வந்துவிடவேண்டும் என்பதற்காகவே இப்போதே வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்களாம்.

Related Posts