சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனுடன் இணையும் ஜீ.வி.பிரகாஷ்

மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இதற்கடுத்து, சோனி நிறுவனம் முதலீடு செய்ய கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

அப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனவரி 15,2022 அன்று வெளியானது.

ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தயாராகவிருக்கும் அந்தப்படத்தில், நாயகியாக சாய்பல்லவி நடிக்கவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் காஷ்மீரில் தொடங்கவிருக்கிறது.

இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த பல படங்களுக்கு அனிருத், டி.இமான், யுவன் ஷ்ங்கர் ராஜா ஆகியோர் இசையமைத்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்துக்கு இசையமைப்பாளராக ஹாரிஸ்ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்படவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.

அதன்பின், ஹாரிஸ் ஜெயராஜ் வேண்டாம் அனிருத்தை இசைய்மைக்க வைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.

ஆனால், அனிருத் தற்போது இந்தியன் 2, ஜவான் உட்பட பல பெரிய படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருப்பதால் இந்தப்படத்துக்கு இசையமைக்கவியலாத சூழல் இருந்திருக்கிறது.

இதனால் இந்தப்படத்தை அனிருத் ஒப்புக்கொள்ளவில்லையாம்.

அதன்பின், இந்தப்படத்துக்கு இசையமைக்க ஜீ.வி.பிரகாஷை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம்.

இதன்மூலம் சிவகார்த்திகேயன் படத்துக்கு முதன்முறையாக ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts