ட்யூட் மற்றும் பைசன் – முதல் நான்கு நாட்கள் வசூல் நிலவரம்
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவான படம் ‘டியூட்’.
தெலுங்குப்பட நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால் உட்பட பலர் நடிப்பில் உருவான படம் பைசன் காளமாடன்.இயக்குநர் பா.இரஞ்சித் தயாரித்திருந்தார்.
சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவான திரைப்படம் ‘டீசல்’. தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருந்தன.
இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் உருவான ‘கம்பி கட்ன கதை ‘ படத்தில் நட்டி நடராஜ், சிங்கம் புலி, முருகானந்தம், சாம்ஸ்,மறைந்த நடிகர் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்தை மங்காத்தா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரவி தயாரித்திருக்கிறார்.
இந்த நான்கு படங்களும் இவ்வாண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதியே திரையரங்குகளில் வெளியாகின.
இவற்றில் ட்யூட் மற்றும் பைசன் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.ட்யூட் படம் முதல்பாதி சிறப்பாக இருக்கிறது.இரண்டாம் பாதி அந்தளவுக்கு இல்லை என்றும் பைசன் படம் முதல்பாதி மெதுவாக இருக்கிறது இரண்டாம் பாதி நன்றாக இருக்கிறது என்கிற விமர்சனங்களை இப்படங்கள் பெற்றன/ஆனாலும் இவ்விரு படங்களும் வசூலில் முன்னின்றன.
தமிழ்நாடு திரையரங்குகளில், அக்டோபர் 17,18,19 மற்றும் தீபாவளி நாளான அக்டோபர் 20 ஆகிய நான்கு நாட்களிலும் சேர்த்து சுமார் 35.50 கோடி வசூலைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறது ட்யூட் படம்.
இந்த நான்கு நாட்களிலும் சுமார் 19 கோடி வசூலித்து இரண்டாமிடத்தில் இருக்கிறது பைசன் திரைப்படம்.
டீசல் படம் நான்கு நாட்களுக்கும் சேர்த்து சுமார் இரண்டு கோடி வசூல் செய்திருக்கிறது என்கிறார்கள்.
கம்பி கட்ன கதை படம்,நான்கு நாட்களிலும் சேர்த்து சுமார் சுமார் ஐம்பது இலட்சம் வரை வசூல் செய்திருக்கும் என்கிறார்கள்.
தீபாவளிக்கு மறு நாளான இன்றும் விடுமுறை நாள் என்பதால் இன்றைய வசூலும் குறிப்பிடத்தக்க அளவில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதனால், ட்யூட்,பைசன் ஆகிய இருபடங்களுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்குக்காரர்கள் ஆகியோருக்கு இலாபம் கொடுக்கும் படமாக இருக்கும் எவ்வளவு இலாபம் என்பது போகப் போகத் தெரியும் என்கிறார்கள்.











