சிவகார்த்திகேயனின் டான் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “டான்”. ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள் ‘டான்’ படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்று காலை பத்துமணி பத்து நிமிடத்தின் போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
அதன்படி, மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
இந்த அறிவிப்பு வெளியானது முதல் சிவகார்த்திகேயன் இரசிகர்கள் அதனைப் பகிர்ந்து கொண்டாடிவருகிறார்கள்.











