தனுஷ் நடிக்கும் புதியபடங்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தனுஷ் நடிப்பில் என்னைநோக்கிப் பாயும் தோட்டா படம் தயாராகியிருக்கிறது.
அதைத் தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது.
அதைத் தொடர்ந்து கொடி படத்தின் இயக்குநர் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும் அதைத் தொடர்ந்து ராட்சசன் பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவிருக்கிறார்.
அஜீத் நடிக்கும் விஸ்வாசம் படத்தைத் தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படங்களைத் தயாரிக்கிறது.
இவற்றின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்பட்டது.
இப்படங்களின் நாயகிகள் உள்ளிட்ட மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.










