தர்பார் வசூல் எவ்வளவு? – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் சனவரி 9 ஆம் தேதி வெளியானது.
இப்படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்தார்.
இந்தப் படத்தின் வசூல் நிலவரங்கள் தொடர்பாகப் பலரும் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தார்கள்.
இந்நிலையில், ‘தர்பார்’ படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம் தங்களுடைய படம் 4 நாட்களில் உலக அளவில் 150 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.











