தனுஷ் 40 படத்தின் பெயர் மற்றும் ரிலீஸ் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு
தனுஷின் 40 ஆவது படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் உடன் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஒய் நாட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இலண்டனில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றது.
படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் தற்போது மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜகமே தந்திரம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் வரும் மே 1-ம் தேதி வெளியாகும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குழுவின் இந்த அறிவிப்பை கொண்டாடி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.











