ரஜினிக்கு அப்புறம் அர்ஜுன்தாஸ் தான் – இயக்குநர் புகழாரம்
அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள படம் “பாம்”.
இதில், அர்ஜூன் தாஸ், ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகியோரோடு, காளி வெங்கட், நாசர், அபிராமி, ரமேஷ் திலக், பால சரவணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்துக்கு இசை – டி.இமான்,கதை & திரைக்கதை – மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன், விஷால் வெங்கட்,வசனம் – மகிழ்நன்.பி.எம்,ஒளிப்பதிவு – பி.எம்.ராஜ்குமார்,படத்தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா,கலை இயக்கம் – மனோஜ் குமார்,
உடை வடிவமைப்பு – பிரியா ஹரி, பிரியா கரண்,
நடன அமைப்பு – அப்ஸர்,சண்டைப்பயிற்சி – முகேஷ்
GEMBRIO PICTURES சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரித்துள்ள இப்படம்,
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு,ஆகஸ்ட் 29 அன்று நடைபெற்றது.
நிகழ்வில், GEMBRIO PICTURES சார்பில் ஷரைலி பாலகிருஷ்ணன் பேசியதாவது…
எங்கள் படத்தை வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இது எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் முதல்படம். இந்தப்படம் பார்த்தபோது எங்களுக்குப் புரிந்தது – இந்தப்படம் அனைத்து தரப்பினருக்குமானது என்பதுதான்.ஒரு குறிப்பிட்ட தரப்பே பார்க்க வேண்டிய படம் அல்ல; அனைவரும் இரசிக்கும் படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.அன்பே சிவம். அன்புதான் நம்மை எல்லோரையும் ஒன்றிணைக்கும். அதை இந்தப்படம் செய்கிறது. நன்றி என்றார்.
GEMBRIO PICTURES சார்பில் சம்விதா பாலகிருஷ்ணன் பேசியதாவது…
அன்பைத் தாண்டி இந்தப்படத்தில் எல்லோரையும் இணைக்கும் வேறு ஒரு விஷயமும் உள்ளது. டிரெய்லர் பார்த்தால் உங்களுக்குப் புரியும்.படத்துக்கு அப்பாற்பட்ட வகையில் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது.இமான் சார் இசையில் அனைத்துப் பாடல்களும் அருமையாக வந்துள்ளன.நாங்கள் படம் பார்த்தபோது பெற்ற சந்தோஷத்தை, நீங்கள் அனைவரும் உணர்வீர்கள். இந்தப்படத்தை வெளியிடும் சக்திவேலன் சாருக்கு நன்றி என்றார்.
ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் பேசியதாவது…
தயாரிப்பாளர் சுதா மேடமுக்கு நன்றி.விஷாலும் நானும் இன்ஸ்டிடியூட்டில் ஒன்றாக படித்தோம்.அங்கிருந்து தொடங்கிய பயணம் இன்று இணைந்து படம் செய்வதற்கு வழிவகுத்தது.இமான் சார் சிறப்பான இசையைத் தந்துள்ளார்.படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி.படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி என்றார்.
நடிகர் சரவணன் பேசியதாவது…
இயக்குநர் விஷால் வெங்கட்டை, நான் வாய்ப்புதேடி அலையும்போது, “நரை எழுதும் சுயசரிதம்” பட ப்ரிவ்யூவில் சந்தித்தேன்.அவர் இயக்கிய “சில நேரங்களில் சில மனிதர்கள்” மிகச்சிறந்த படம். மிக நல்ல கலைஞர்.அவரிடம் ஆசைப்பட்டுக் கேட்டு, கெஞ்சியும் வாங்கி நடித்திருக்கிறேன். மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி என்றார்.
நடிகர் டி.எஸ்.கே பேசியதாவது…
போனவருடம் லப்பர் பந்து, இந்தவருடம் பாம். அந்தப்படத்தில் நடித்த பல நண்பர்கள் இதிலும் நடித்துள்ளனர்.இது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.இதற்கு முன் காமெடிதான் செய்து கொண்டிருந்தேன்;ஆனால் என்னை நம்பி விஷால் வெங்கட் ஒரு நல்லவேடம் தந்தார்.அவரின் சில நேரங்களில் சில மனிதர்கள் படம் பார்த்து அவரிடம் வாய்ப்பு கேட்டேன்.இரண்டு வருடம் கழித்து அவரே கால் செய்து இந்த வாய்ப்பை தந்தார் – அவருக்கு நன்றி.இமான் சார் இரசிகன் நான்; அவருடைய பாடல்களை மிமிக்ரி செய்து வந்தவன்.அவருடைய படத்தில் நடித்தது பெருமை. ஏ, பி, சி ஆடியன்ஸை கவரும் இசையமைப்பாளர் இமான் சார் – அவருக்கு நன்றி.மாஸ் ஆக்ஷனாக நடித்த அர்ஜூன் தாஸை, முழுக்க முழுக்க சாஃப்டாக காட்டும் படமாக இது இருக்கும். ஷ்வாத்மிகா ஹீரோயின் மாதிரி நடக்கவே மாட்டார்; மிக இயல்பாகப் பழகுவார். ஒரு ஹேப்பியான உணர்வைத் தரும் சிறப்பான படமாக இது இருக்கும். அனைவருக்கும் நன்றி என்றார்.
TrendMusic ஜித்தேஷ் பேசியதாவது…
இப்படத்தில் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி. சுதா மேடம் இந்தப்படத்தை நம்பி தயாரித்ததற்கு வாழ்த்துகள்.படம் பார்த்தோம் மிகச்சிறப்பாக இருந்தது. அர்ஜூன்தாஸை வேறு கலரில் காட்டியுள்ளார்கள். இந்தப்படத்தின் இசையில் நாங்கள் பங்கு கொண்டது மகிழ்ச்சி.மணிகண்டன்,காளி வெங்கட் எனப்பல திறமையாளர்கள் இப்படத்தில் பங்கேற்றுள்ளார்கள். இமான் அற்புதமான இசையை தந்துள்ளார். செப்டம்பர் 12 எல்லோரும் திரையில் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
எழுத்தாளர்கள் மணிகண்டன் மாதவன், அபிஷேக் சபரிகிரீசன் பகிர்ந்துகொண்டதாவது…
விஷாலுடன் நாங்கள் ஒரு டீக்கடையில் பேசி, பேசி உருவானதுதான் இந்தப்படத்தின் கதை.அவர் எல்லோரையும் போல எங்களிடமும் வேலை வாங்கினார். இந்தப்படத்தில் பெரிய கருத்தெல்லாம் பேசாமல், உங்களைச் சிந்திக்க வைக்க சிரிக்க வைக்க முயற்சித்துள்ளோம்.
அன்பென்றால் என்ன என்பதை இப்படம் பேசியுள்ளது. ரைட்டிங்கில் இல்லாத பெரிய விஷயத்தை ஒரு ஷாட்டில் காட்டி தான் இயக்குநர் என்பதை விஷால் வெங்கட் நிரூபித்திருக்கிறார்.
டிரெய்லர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறோம். படத்தில் மிகச்சிறந்த செய்தி இருக்கும். அனைவருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும் நன்றி என்றார்.
சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…
இந்தப்படம் பார்த்து மிகவும் பிடித்திருந்தது. தயாரிப்பாளர் சுகுமார் சார் செய்யாத தொழிலே இல்லை.எல்லாவற்றிலும் ஜெயித்துள்ளார்.படத்திலும் ஜெயிக்கலாம் என வந்துள்ளார்.அடுத்த மாதத்தில் பெண்களுக்கென ஒரு சாட்டிலைட் சேனல் ஆரம்பிக்கவுள்ளார்.அவரிடம் நிறைய புதுஐடியாக்கள் உள்ளது.அவர்போல நிறையப் புதுமுகங்கள் திரைக்கு வரவேண்டும்.இந்தப்படத்தில் காளி வெங்கட் அற்புதமாக நடித்துள்ளார்.இப்படம் மண்டேலா, முண்டாசுபட்டி படங்கள் போல இனிமையான படமாக இருக்கும். அர்ஜூன் தாஸுக்கு ஒரு புதுமையான படமாக இருக்கும். அவர் இயக்குநர் கேட்டதை அப்படியே தந்துள்ளார். இமான் பாமர மக்களுக்கான எளிய இசையைத் தொடர்ந்து தந்துவரும் இசையமைப்பாளர்.அவருடைய தேவை இங்கு நிறைய இருக்கிறது.எல்லோரும் இணைந்து அழகான படத்தைத் தந்துள்ளார்கள். இந்தப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவரும் முழு உழைப்பையும் தந்துள்ளார்கள். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் நன்றி என்றார்.
இயக்குநர் ரா பார்த்திபன் பேசியதாவது…
பாம் படத்தைப்பற்றி என்ன பேசுவது என நிறைய யோசித்தேன்.முதலில் வாயுபகவானை வணங்கித் தொடங்குவோம்.இந்தமாதிரி கதையை டைட்டிலை தேர்ந்தெடுக்கணும் என்றால் இயக்குநர் விஷால் வெங்கட் எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்கவேண்டும்,இதைத் தயாரிக்க வேண்டுமென்றால் தயாரிப்பாளர் அதைவிட எவ்வளவு பெரிய குசும்பனாக இருக்கவேண்டும். ஆங்கிலபடங்களில் தான் இதுமாதிரி பார்த்திருப்போம். ஆனால் அதைத் தமிழ்சினிமாவில் காட்டுவது சவாலான விஷயம்,அதை இந்தப்படக்குழு சாதித்துள்ளது.சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் எப்போதும் கண்டென்ட் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்.இந்த கண்டென்ட் அவருக்கு பிடித்திருக்கிறது.இமான் ஏ பி சி செண்டர் மட்டுமில்லை டி செண்டரையும் கவர்ந்து விடுவார், அதனால்தான் அவர் டி.இமான்.தயாரிப்பாளர் சுகுமார் இல்லை சதா தான் – ஆம், சதா.சுதாவைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருப்பார்.அதனால் சுதா இல்லை சதா தான் தயாரிப்பாளர்.நான் எப்போதும் ஹீரோயின் பார்த்துதான் படம் செய்ய ஆசைப்படுவேன்.ஆனால் அர்ஜூன்தாஸைப் பார்த்தால் ஹீரோவை மையமாக வைத்துப் படமெடுக்கத் தோன்றுகிறது.ஷிவாத்மிகாவை சின்னவயதிலிருந்து பார்த்து வருகிறேன் – நல்ல நடிகை. தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும் வாழ்த்துகள் என்றார்.
நடிகர் காளிவெங்கட் பேசியதாவது…
இந்தப்படத்தில் இப்படி ஒரு வாய்ப்பை தந்ததற்கு விஷால் வெங்கட்டுக்கு நன்றி.முதலில் கதை சொன்னபோது அவர் நடிப்பேனா என்ற சந்தேகத்திலேயே இருந்தார்.அருமையான கேரக்டர் எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி.எத்தனை கோடி சம்பாதித்தாலும் தன் பிணக்கோலத்தைப் பார்க்கும் வாய்ப்பு யாருக்கும் கிடைக்காது.அது மாதிரி நிறைய ஆச்சரியங்கள் இப்படத்தில் கிடைத்தது.அர்ஜூன்தாஸுடன் அநீதிக்கு பிறகு சேர்ந்து நடிக்கிறோம்.படத்தில் என்னைத் தூக்கிச்சுமந்து நடித்துள்ளார்,அவருக்கு என் நன்றி. சக்தி ஃபிலிம் ரிலீஸ் என்றார்கள் – படம் வெற்றி தான். தயாரிப்பாளர்கள் என்னை அமெரிக்கா கூட்டிப்போவதாகச் சொல்லியுள்ளார்கள்.மறந்து விடாதீர்கள்.இது மிக நல்லபடம்.ஆதரவு தாருங்கள்.எல்லோருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் கார்த்திகேயன் மணி…
இந்தப்படத்தின் கதைக்கரு சுவாரஸ்யமானதாக உள்ளது. காளிவெங்கட் சார் மெட்ராஸ் மேட்னி படத்தில் நடிக்கும் போது இந்தப்படம் பற்றிச் சொன்னார்.அவர் சின்னவயதிலேயே எத்தனைவிதமான பாத்திரங்கள் செய்துவிட்டார்.ஒருமுறை சேவலாக நடித்துக்காட்டி அசத்தினார்.சயின்ஸ் ஃபிக்ஷன் படமெடுத்தால் அவரை ஏலியனாக நடிக்கவைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் சண்முகபிரியன்…
விஷால் வெங்கட் மிக நல்லமனிதர்.எனக்குப் படம் காட்டினார்,அட்டகாசமாக இருந்தது.ஷிவாத்மிகா ஃபேன் நான்,அருமையாக நடித்துள்ளார்.அர்ஜூன்தாஸை எப்படி இந்த கதாபாத்திரத்தில் யோசித்தார் எனத் தெரியவில்லை.அவர் என்ன கொடுத்தாலும் செய்வார் என்பதற்கு இந்தப்படம் சாட்சி.எல்லோரும் மிக அட்டகாசமாக நடித்துள்ளனர்.படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
இசையமைப்பாளர் டி.இமான்…
இப்படம் முள்ளுமேல் நடப்பது மாதிரியான ஒரு கதை, ஆனால் அதை மிக கவனமாக அழகாக எடுத்துள்ளார் விஷால் வெங்கட்.சில நேரங்களில் சில மனிதர்கள் பார்த்தவுடன் அவருடன் வேலை பார்க்க ஆசைப்பட்டேன். அவருடன் பணிபுரிந்தது மிகமிக சந்தோசமாக இருந்தது. நம் மண்ணின் கதை சொல்லும் இந்தமாதிரி படங்களுக்கு நம் மண்ணின் இசை கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.இப்படத்தில் முறையான புதுமுக பிளேபேக் சிங்கர்ஸ் பாடியிருக்கிறார்கள்.அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.அர்ஜூன்தாஸ் தன் பிம்பத்தை உடைத்து புதிதாகச் செய்கிறார்.வாழ்த்துகள். கண்டிப்பாக இந்தப்படம் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி என்றார்.
இயக்குநர் லோகேஷ்…
அர்ஜூன்தாஸ் பிரதர் அவருடைய இமேஜை உடைத்து இப்படத்தைச் செய்துள்ளார்.ஷிவாத்மிகா இப்படத்தில் நேரில் நடிப்பதைப் பார்த்தேன் – மிகச்சிறப்பாக நடித்துள்ளார்,அவருக்கு வாழ்த்துகள்.காளி வெங்கட் சார் நிறைய இடத்தில் என் அப்பாவைப் பிரதிபலித்தார் – மிகச்சிறந்த நடிகர்.வாழ்த்துகள்.விஷால் வெங்கட்டும் நானும் புரொடக்ஷன் மேட்,தயாரிப்பு கம்பெனியில் சந்தித்தோம்,நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டோம். விஷால் எந்த பிரச்சனையையும் ரொம்ப கேஷுவலாக எடுத்துக்கொள்வார்.நம் வெற்றியை அவர் வெற்றியாகக் கொண்டாடுவார்.இப்படி ஒரு கதையைப் படமாக்கும் தைரியம் இவரைத் தவிர யாருக்கும் வராது.கண்டிப்பாக இந்தப்படம் மிகச்சிறப்பான வெற்றியைப் பெறும். அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் ஶ்ரீகணேஷ்…
விஷாலின் முதல்படம் எனக்கு ரொம்ப பிடிச்சபடம். அவரைத்தேடி கால் செய்து பேசினேன்.அவரின் இந்தப்படம் வெற்றிப்படமாக இருக்கும் என்பது இங்கு பேசியவர்கள் மனதிலிருந்து தெரிகிறது.அர்ஜூன் தாஸுக்கு இந்தப்படம் அவரை புதுடைமென்ஷனில் பார்க்கும் படமாக இருக்கும். டி.இமான் சார் செய்யும் புது விஷயம் – இவ்வளவு புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு தருவது மிகப்பெரிய விஷயம். காளி அண்ணா இந்தியாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருத்தர். அனைவருக்கும் வாழ்த்துகள். படம் வெற்றி பெற வாழ்த்துகள் என்றார்.
இயக்குநர் சிபி சக்கரவர்த்தி…
விஷால் பிரதர் கதை சொன்னபோது யார் நடிக்கிறார்கள் எனக்கேட்டேன்,அர்ஜூன்தாஸ் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஆனால் படம் பார்த்து அசந்து விட்டேன்.வில்லன் நடிகர் இன்னொசன்ஸை செய்வதை இந்தியாவிலேயே சிறப்பாக செய்பவர் ரஜினி சார். அவருக்கு அப்புறம் அர்ஜூன்தாஸ் தான்.காளி வெங்கட் அண்ணன் டான் பைலட் ஃபிலிமில் எந்த தயக்கமும் இல்லாமல் நடித்துத்தந்தார்.சினிமாவை உண்மையாக நேசிப்பவர்,அவர் திறமைக்கு ஏற்ற கதாப்பாத்திரங்கள் அவருக்குக் கிடைக்கவில்லை.விஷால் வெங்கட்டும் நானும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.இப்படத்தில் அவர் இயக்குநராக இல்லாமல் எல்லா வேலையும் பார்த்துள்ளார்.இந்தப்படம் மிகப்பெரிய விஷயத்தை மிக எளிமையாகப் பேசுகிறது.கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி என்றார்.
நடிகர் மணிகண்டன்…
இந்தப்படத்தில் வேலை பார்த்த அனைவருமே என் நெருங்கிய நண்பர்கள்தான்.கிட்டதட்ட எல்லாத்துறையில் வேலை பார்த்தவர்களும் என் நண்பர்கள்.அவர்கள் எல்லோரும் இப்படத்தில் வேலை பார்த்துள்ளார்கள் என்பது மகிழ்ச்சி.காளிஅண்ணா யார் என்ன உதவி, எந்த சமயத்தில் கேட்டாலும் செய்யத்தயங்காதவர். அவரைப்பற்றி எவ்வளவு சொன்னாலும் பத்தாது.இமான் சார் வெரைட்டியான சாங்ஸ் தரும் வெகு சில இசையமைப்பாளர்களில் ஒருத்தர்.அவர் இசையமைத்தது மகிழ்ச்சி.இப்படி ஒரு கதையைத் தயாரித்த தயாரிப்பாளருக்கு நன்றி.அர்ஜூன்தாஸ் அவர் முதல் படத்திலேயே எப்படி அவ்வளவு கான்ஃபிடன்ஸ்-ஆ அந்த கதாப்பாத்திரத்தை செய்தார் என ஆச்சரியமாக இருந்தது.தொடரும் அவர் முயற்சிக்கு வாழ்த்துகள். ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார்.விஷால் வெங்கட் 2008 இல் இருந்து பழக்கம்.அவன் அனுபவித்த தடைகளை,அனுபவித்த வலிகளை அருகிலிருந்து பார்த்திருக்கிறேன்.அவன் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்.அவன் வெற்றி எனக்கு மிகப்பெரிய பெருமை.இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றிபெறும். நன்றி என்றார்.
நடிகை ஷிவாத்மிகா…
எனக்கு வாய்ப்பு தந்த சுகுமார் சார், சுதா மேம் இருவருக்கும் நன்றி.இமான் சார் இசைக்கு நான் இரசிகை.அவர் இசையில் நடித்தது மகிழ்ச்சி.காளிவெங்கட் சார் மாதிரியான ஒரு நடிகரோடு நடித்தது பெருமை.படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.விஷால் சார் பல தடங்கல்களைத் தாண்டி இந்தப்படம் செய்துள்ளார்.எங்களை விட அவருக்காக இப்படம் பெரியவெற்றி பெறும்.என்னை இந்த கதாபாத்திரத்திற்காக நம்பியதற்கு நன்றி.அர்ஜூன்தாஸ் நல்ல நண்பராகக் கிடைத்துள்ளார்.அவருடன் நடித்ததும் மகிழ்ச்சி.அனைவருக்கும் நன்றி என்றார்.
இயக்குநர் விஷால் வெங்கட்…
GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் பெரிய நன்றி.ஒரு ஐடியாமேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பளிப்பது மிகப்பெரிய விஷயம்,என்னை நம்பி இன்றுவரை ஆதரவாக இருக்கிறார்கள் நன்றி.அர்ஜூன்தாஸுக்கு இந்தக்கதை சொன்னேன்,அவர் என்னை நம்பியதற்கு நன்றி.கதை எழுதியது முதல் ஷிவாத்மிகாதான் என் மைண்டில் இருந்தார்,சிறப்பாக நடித்துத்தந்ததற்கு நன்றி.காளிவெங்கட் சாரிடம் கதை சொன்னபோது அவர் நடிப்பாரா எனச் சந்தேகம் இருந்தது.படம் முழுக்க பிணமாக நடிக்கவேண்டும்,மூச்சுவிடக்கூடாது – ஆனால் அசத்தியிருக்கிறார்.சிங்கம்புலி சாரை நிறையக் கஷ்டப்படுத்தியுள்ளோம்,சகித்துக்கொண்டதற்கு நன்றி. நாசர் சார் என் படத்தில் ஒரு ஃப்ரேமிலாவது இருக்கவேண்டும் என ஆசைப்படுவேன்,அதேபோல் தான் அபிராமி மேடமும்.இருவருக்கும் நன்றி.ராஜ்குமார் – கேமரா பற்றி எதுவுமே தெரியாத ஆள்;நான் இயக்கம் என்றால் என்னவென்று தெரியாத ஆள்.ஆனால் நாங்கள் படித்து இப்போது இந்த மேடையில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக இருக்கிறோம் – மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்காக உழைத்துத் தந்த அனைவருக்கும் நன்றி. செப்டம்பர் 12 இந்தப்படம் திரைக்கு வருகிறது. உங்கள் எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்குமென நம்புகிறேன். ஆதரவு தாருங்கள். நன்றி என்றார்.
நடிகர் அர்ஜூன் தாஸ்…
எல்லோருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.இந்த கதாப்பாத்திரம் தந்த விஷாலுக்கு நன்றி.இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. GEMBRIO PICTURES சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் இருவருக்கும் நன்றி.இருவரும் டீம்-ஓடு ஷூட்டில் கலந்துகொண்டு ஆதரவு தந்ததற்கு நன்றி. விஷால் – இமான்சார் தான் இசை என்றவுடன், அவர் படத்தைப் பார்த்துக்கொள்வார் என்று சொன்னேன். காளி வெங்கட் சார், அநீதி படத்தில் நடித்திருந்தாலும் அதில் ஒன்றாக நடிக்கவில்லை,ஆனால் இப்படத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி.இந்தப்படத்தில் நான் லீட் இல்லை,விஷால் அவர் டீம்தான் லீட்.நான் ஒரு குட்டிபார்ட்.இப்படத்தில் வேலைபார்த்த அனைவருக்கும் என் நன்றிகள்.ஷிவாத்மிகா அருமையாக நடித்துள்ளார், அவருடன் வேலை பார்த்தது சந்தோஷம்.விஷால் கதை சொன்னவுடன் – “நான் தான் பண்ணனுமா?” எனக் கேட்டேன். எல்லோரும் சொல்லியும் என்னை நம்பி தந்ததற்கு நன்றி. இப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். நன்றி.
இவ்வாறு அவர் பேசினார்.











